பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 அகத்திணைக் கொள்கைகள் நிற்கின்றது' என்ற மறைமலையடிகளின் கூற்று இப்பாட்டிற்கு எவ்வகையானும் பொருந்தும். முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப் பாலை ஆகிய மூன்றும் புறப்பகுதிகள் கலந்த அகப் பாட்டுகள். இதிலோ புலவர் புறம் கலவாது எல்லா அடிகளையும் அகமாகவே ஆக்கியுள்ளார். அப் பெருமான் பெற்றிருந்த ஒரு திணை முழுப் பயிற்சியே இத்தகைய சிறப்பாக்கத்திற்குக் காரணம் என்று கருதலாம். கபிலர் படைத்துக் காட்டும் தோழி உலகியலை நன் கறிந்தவள்; அறிவுக் கூர்மையுடையவள். களவியலைக் கற்பனைத் திறத்துடன் நெடிது இயக்குபவள் இவளே. கபிலர் பாடல்களில் தோழி கொள்ளும் பங்கு மிகப் பெரிது. அவர் பாடிய 197 அகப் பாடல்களுள் 120 பாடல்கள் தோழி கூற்றாகவே வருகின்றன. 'பெருங்குறிஞ்சியும் தோழியின் கூற்றே. தலைவியின் வாழ்க்கை யொடு முற்றும் ஒன்றியவளாக இயங்குகின்றாள் இவள். யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பின் இருதலைப் புள்ளின் ஒருயி ரம்மே." என்று தன்னையும் தலைவியையும் ஒருயிரின் இருதலையாகக் கொள்வதைக் காண்மின். பிறிதோரிடத்தில் தோழி தலைவியின் களவினைப் பெற்றோர் அறிவாராயின் நாணத்தாலும் அச்சத் தாலும் இறந்துபடுவள் என்றும், அவள் இறப்பின் தானும் மரிப்பது உறுதி என்றும் எடுத்துரைக்கின்றாள்; விரைவில் வரைந்து கொள்ளுமாறு தலைவனை முடுக்குகின்றாள் (கலி-52). கார் காலத்தின் நள்ளிரவில் அடாது மழை பெய்து ஓய்ந்தது. அன்னை உறங்குகின்றாள்; அன்று தந்தையும் இல்லத்தில்தான் உள்ளான். வீட்டின் விளக்கும் அணைந்துவிட்டது. மராமரத்தி லிருந்து கூகை குழறுகின்றது. இவ்வமயம் தலைவன் தோட்டத் தில் வந்து நிற்கின்றான். இந்தச் சூழ்நிலையில் தலைவிக்குப் புதுத் துணிவு பிறக்கின்றது. மையிருட்டைக் கண்டு மயங்கிலள்: கூகையின் குழறலுக்கும் வெருவிலள். முருகன் அன்ன சீற்றம் கொள்ளும் தந்தையையும் பொருட்படுத்திலள். கனத்த காதணி கள் ஒளி காட்ட, பின்னிய கூந்தலில் மலர் சூடிக் கொண்டாள். ஏணி வழியாக ஏறி வரையினின்றிழியும் மயிலைப் போல இறங்கித் 16. மறைமலையடிகள்: பட்டினப்பாலை ஆராய்ச்சி யுரை-பக். 76 - 17. அகம் - 12