பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 525 தலைவனுடன் அளவளாவி இன்புற்றுத் திரும்பி வந்து முன் போலவே படுக்கையிலிருந்தாள். மறுநாள் அன்னை தோழியிடம் :மகள் ஏணிமேல் ஏறி இறங்கக் கண்டேன்' என்று கூறிக் கொதித்தெழுகின்றாள். இதற்குத் தோழியின் சாதுரியம் அமைந்த மறுமொழி இது: அலையல் வாழிவேண்டு அன்னைநம் படப்பைச் சூருடை சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண்டுருவன் அணங்குமார் வருமே நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவாண்டு மருட்டலும் உண்டே முருகன் அன்னை சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும் இல்லன் ஆக - அஞ்சுவள் அல்லளோ இவளிது செயலே." (அலையல்-வருத்தாதே; வேண்டு-விரும்பிக்கேள்; படப்பைதோட்டம்; சூர்-தெய்வம் அணங்கு-ஒரு தெய்வம்; வாயே போல-உண்மைத் தோற்றம் போல; துஞ்சுநர்-துயில்போர்; மருட்டல்-மயக்கல்; சீற்றம்-சினம்; திறல்-வலிமை) பேய் நம்பிக்கையும் கனவு நம்பிக்கையும் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ளவை. ஆதலின் தெய்வம் விரும்பிய உருவங்கொண்டு யாண்டும் திரியும் என்றும், நனவு போலவே கனவும் தோன்றும் என்றும் கூறி அன்னையை ஏமாற்றுகின்றாள் தோழி. தந்தை இல்லத்திலிருக்குங்கால் இதனைத் துணிவாளா?' என்று மேலும் சான்று கூறுகின்றாள். - - - தோழியின்பால் தலைவிக்கும் நிறைந்த அன்பு உண்டு. தோழி கூறுவனவற்றை வெல்லாம் தலைவி நம்புவாள். குற்றத் தையும் குணமாக எடுத்துக் கொள்வாள். ஊசலுார்ந் தாட ஒருஞான்று வந்தானை ஜய சிறிதென்னை ஊக்கி எனக் கூறத் தையால் நன்றென்று அவனுக்கக் கைநெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வயாச்செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல் மெய்யறியா தேன்போற் கிடந்தேன்மன்' 18. அகம்-158 19. கலி-37