பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர்பெற்றோர் 527 யில் அமைந்துள்ள உள்ளுறை உவமம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பான்மையது. பரத்தையிற் பிரிந்து சென்று திரும்பிய தலைவன் வாயில் வேண்டித் தோழியிடம் வருகின்றாள்; அவள் வாயில் மறுக்கின்றாள். தோழி தலைவனை விளிப்பதாக அமைந் துள்ள பாடலின் முற்பகுதியில் உள்ளுறை அமைந்துள்ளது. நறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப் பூட்டறு வில்லில் கூட்டுமுதல் தெறிக்கும் பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் அரவாய் அன்ன அம்முள் நெடுங்கொடி அருவி ஆம்பல் அகலடை துடக்கி அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை விசைவாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் கழனியம் படப்பைக் காஞ்சி ஊர.* (நறவுகள்: மண்டை-மொந்தை நுடக்கல்-கழுவப் பெறல்; இறவு-இறா மீன்: கலித்து-செருக்குற்று; கூட்டு முதல்நெற்கூடுகள்; தெறிக்கும்-துள்ளி விழும் பழனம்-மருத நிலம்; அம்முள்-அழகிய முள் அருவி ஆம்பல்-நீர்க்குறை வற்ற ஆம்பல்; அகல் அடை-அகன்ற இறை: அசைவரல்அசைந்து வரும்; துாக்கலின்-அசைத்தலின்; விசைவாங்கு தோல்-விசைத்து இழுத்து விடும் துருத்தி, வீங்குபு. புடைத்து, ஞெகிழும்-சுருங்கும்; கழனிவயல்; படப்பைதோட்டம்) இதில் மருதநில வருணனை மாண்புற அமைந்துள்ளது. ஒரு பொய்கைக் கரை. அங்குக் கள்ளுண்ட கலத்தைக் கழுவின நீரை இறால் மீன் பருகுகின்றது. இதனால் மீன் களிப்புற்று களிப்புக்குப் போக்கு வீடாக நெற்கூடுகளின் அடிகளில் துள்ளிக் குதிக்கின்றது. பொய்கைக் கரையில் அரத்தின் வாய்போன்ற அழகிய முட்களை யுடைய பிரம்பின் நீண்ட கொடி நீர்வளத்தால் செழித்து வளர்ந் துள்ள ஆம்பலின் அகன்ற இலையைச் சுற்றிக் கொள்ளுகின்றது. வாடைக் காற்று வீசுதலால் அந்த இலை ஊதப்பெறும் கொல்லன் உலைக் களத்து விசைத்து இழுத்துவிடும் துருத்தியைப்போல் புடைத்துச் சுருங்கும். “இத்தகைய பழனப்பொய்கையையும் வயல் களையும் தோட்டங்களையும் உடைய காஞ்சி மரங்கள் செறிந்த ஊரனே!" என்று தலைவனை விளிக்கின்றாள். AASAASAAAS 21. அகம்-96.