பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/547

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 529 கின்றன; அவற்றினிடையே மொட்டுகள் செழித்து வளர்ந்துள்ளன. இந்த மொட்டுகளிடையே தாமரைப் பூக்கள் புன்முறுவல் பூத்த முகம்போல் மலர்ந்து காணப்பெறுகின்றன. இந்த வயலில் வேம்பின் அரும்பினையொத்த கண்களையுடைய ஒரு ளுெண்டு பரத்தமைக்குப் பிரிந்து சென்றது. இஃது இரைக்காக அற்றம் பார்த்திருந்த வெண்குருகினைக் கண்டு அஞ்சி அயலிலுள்ள தழைத்த சிவதையினையுடைய கரிய சேற்றுப் பிழம்பில் தேமல் போல் வரியுண்டாக ஒடிச் சென்று விரைந்து ஈரம் மிக்க மண் அளையுட் பதுங்கிக் கொண்டது. இத்தகைய ஊர்ப் பகுதியைச் சேர்ந்த தலைவன் பரத்தையிற் பிரிந்து திரும்பி தோழியை வாயில் வேண்டி நிற்கின்றான். இந்தத் தலைவனை விளித்துப் பேசுகின் றாள் தோழி.

ஊரனே, மலரையொத்த மையுண்ட கண்ணினையும் மாண் புற்ற அணியினையும் உடைய நின்பரத்தை தன்முன் கைகளினால் நின்னைப் பிணித்திருந்த நெடிய பிணிப்பினை விடுத்துச் சென்ற அளவிலே வெகுண்டனள்; தன் முகவனப்பு கெடஏங்கி அழுதனள். சினத்தினால் விரல்களைப் பன்முறை நொடித்தும் எயிற்றினைத் திருகியும் சிறிதும் பொறுமையின்றி ஊரெங்கும் அலர் கூறப் பெறும் நின்னைக் காண்டற்குத் தேடிச்செல்வாள் அவள். எம் போல் புதல்வனைப் பயந்து விருந்தோம்பியும் நீண்ட மனையில் நின்னைப் பிரிந்த நிலையிலும் நினக்கு இருமைக்கும் ஏதுவாகிய மனையறத்தில் வழுவாதொழுகுகின்றோம். என்று கூறி வாயில் மறுக்கின்றாள் தோழி.

இப்பாடலில் நண்டு குருகிற்கு அஞ்சிச் சேற்றில் தேமல்போல் வரியுண்டாக விரைந்து சென்று மண்ணளையில் செறியும் என்ற உள்ளுறையினால் பரத்தைச் சேரிக்கண் அவர் நலத்தினை நுகர்ந்திருந்த தலைவன் அலர் எழுதலை அஞ்சிப் பிறர் கூறும் பழிக்கு நாணித் தன் மனைக்கண் விரைந்து வரலாயினன் என்ற வெளிப்படைப் பொருள் பெறப்படும், இப்பாடலில் புதல்வற். பயந்து என்றது, தலைவியின் முதுமையை எண்ணிப் பரத்தையிற் பிரிந்தான் எனப் புலப்படுத்தியவாறாம். "ஊர் முழுதும் நுவலும்' என்றமையால், பிறர் கூறும் பழி கருதி ஈண்டு வருகின்றாயன்றி அன்பினால் வருகின்றாயல்லை என்றுகூறி வாயில் மறுக்கின்றாள். தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒருமைப்பாட்டினால் தோழி எம். போல்’ எனத் தலைவியைக் கூறினாள் என்பது அறியத் தக்கது. அ-34