பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 531 யும் படைத்துக் காட்டுவர். முன்னவன் களவியல் தலைவனாகவும் பின்னவன் கற்பியல் தலைவனாகவும் காட்சியளிக்கின்றனர். களவியல் தலைவன் நாணமே உருக்கொண்டவன். தன் காம வேட்கையைச் சொல்லால் புலப்படுத்தக் கூசுகின்றான். இவன் நாள்தோறும் தலைவியின் இருப்பிடத்தருகில் வருவான்; வாய் வாளாது திரும்புவான். நெய்தல் நிலக்காட்சிகள் இவன் நெஞ்சத் தில் காமப்புண்ணை உண்டாக்குகின்றன. தனக்கு நேரிட்டதை நவில நா எழவில்லை. காமம் தன்னிடம் எழாதபடி காக்கவோ நெஞ்சுக்கு வன்மை இல்லை. காமம் முற்றத் துறந்த முனிவர் களையும் பதம் பார்த்து, அவர்களைத் தளர்வெய்யச் செய்யும் ஆற்றல் மிக்கது. காதல் உணர்வுக்கு அயர்வும் இல்லை; சோர்வும் இல்லை. காதல் உணர்ச்சி உள்ளத்தே கால்கொண்டுவிடின், அதனை அகற்றுதல் என்பது குதிரைக் கொம்புதான். காதலுக்கு உரியாரை எய்தும்வரை அவ்வுணர்ச்சி பொங்கிக் கொண்டிருக்கு மேயன்றி அடங்குதல் இல்லை. வாய் பேச அஞ்சும் எனினும், அஞ்சிப் பேசும் பேச்சிலும் காதல் தலைக்காட்டாமல் போகாது. மெய் நெருங்க அஞ்சும் எனினும், அஞ்சும் அந்நிலையிலும் காமத் துடிப்பு புலனாகும். 3. முன்னாட் போகிய துறைவன் நெருநை அகலிலை நாவல் உண்டுறை உதிர்ந்த கணிகவின் சிதைய வாங்கிக் கொண்டுதன் தாழை வேரளை வீழ்த்துணைக் கிடூஉம் அல்வற் காட்டி நற்பாற் றிதுவென நினைந்த நெஞ்சமொடு நெடிதுபெயர்ந் தோனே உதுக்காண் தோன்றும் தேரே இன்றும்.”* (நெருதை - நேற்று உண்துறை-நீருண்ணும் துறை: அளை வளை; அலவன் - நண்டு; உதுக்காண் உதோயார் இது தோழி தலைவிக்குக் கூறுவதாக அமைந்த பாடல் தலை வனது உள்ளோட்டத்தைப் புலப்படுத்துகின்றாள். 'அடிக்கடி இவண் வந்து போகும் அன்பன் நேற்று ஒன்று செய்ததைக் கூறு வேன். நீருண்ணும் துறைக்கருகில் நாவற் பழங்கள் உதிர்ந்து கிடந்தன. நன்கு பழுத்த நாவற் கனியொன்றை ஆண் நண்டு எடுத் துச் சென்றது. அதனை வளையில் தங்கியிருந்த பெண் நண்டிற்குக் 24. அகம் - 320