பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 அகத்திணைக் கொள்கைகள் கொடுத்தது. இதனைக் கண்ட அவ்வன்பன் என்னை நோக்கி 'இது நல்ல செயல் அன்றோ?' என்று சொல்லி மேலொன்றும் கூறாது சென்றுவிட்டான்; எதனையோ எண்ணிக் கொண்டே சென்றான் என்பதை மட்டிலும் யான் ஊகித்தேன் அவன் இதோ இன்றும் வருகின்றான்' என்கின்றாள். தோழியின் இந்தக் கூற்றில் தலைவனது அடக்கம் தெரிகின்றது. அடங்கிய காமம் (Subdued passion) துடிப்பதையும் காண்கின்றோம். கவிஞர் காட்டும் களவியல் தலைமகனின் சீரிய பண்பு இது. இளநாகனார் மிகுதியும் பாட மேற்கொண்ட உரிப்பொருள் மருதப் பரத்தமையாகும்; தலைவியின் ஊடற் பண்டை படிப் போரின் உளங்கொள்ள வைக்கும் முயற்சியாகும். இதனாற்றான் 'மருதன் என்ற அடைமொழி தன் பெயருடன் இணைந்து மருதன் இளநாகனார் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். அகத் திணையில் இவர் முதல் கரு உரி என்ற மூன்று பொருள்களையும் மிகவும் அற்புதமாக அமைத்துப் பாட வல்லவர் என்றும், அகத் திணைக்கு இன்றியமையாத உள்ளுறை உவமம், இறைச்சி என்ப வற்றை தயஞ் செறிந்த நிலையில் அமைக்கவல்லவர் என்றும் தெளி கின்றோம். தலைவனது தண்டாப் பரத்தமையை இவர்தம் மருதக்கலி பாடல்கள் மாண்புற அடுக்கிச் செப்புகின்றன. அவனது பரத்தையரின் தொகை ஓர் ஊர் அளவுக்கு இருக்கும்; ஒரு பெரி குடியிருப்பு (Colony) போல் அமையும். - "ஒருர் தொக்கிருந்த நின்பெண்டிர்' என்பது கவிஞரின் வாக்கு. பலப்பல ஆறுகள் வந்து கலப்பினும் நிறையாத கடல்போலப் பரத்தையர் பலரோடு உறவாடியும் அவன் உள்ளத்துக்குக் காமநிறைவில்லை; நாளும் புதுவோரை விரும்புபவன், வகைப் பெருக்கம் வாழ்க்கையின் சுவை (Variety is the spice of life) என்ற கொள்கையையுடையவன் எனத் தலை வனது தண்டாக்காமம் சிறப்பாகப் புனையப்பெறுதலை இக்கவிஞர் கோமானின் மருதத் திணைப் பாடல்களைப் பயில்வதால் அறியலாம். - - "நீயே பெருநலத்தையே; அவனே நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் தண்கமழ் புதுமலர் ஊதும் வண்டென மொழிப; மகன்"என் னாரே..”* 25. கலின்ெ 26, நற்.290