பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/551

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


534 - அகத்திணைக் கொள்கைகள் களைப் பற்றியதன்று; அப்பாக்களை யாத்த கவிஞர்களின் புலமை பற்றியதே என்பதை அகத்திணை ஆராய்ச்சியில் புகுவார் மனத்தி விருத்த வேண்டிய விதிகளில் ஒன்றாகும். இளநாகனார் படைத்துக் காட்டும் திணைத்தலைவி இல்லறத் திலகமாகத் திகழ்பவள். தலைவனது பெரும் பரத்தமையையும் பொறுத்துக் கொள்ளும் பண்பு அவளுக்கு உண்டு. தலைவன் பரத்தைக் குறியோடு வரினும் அவன்பால் உள்ளம் நெகிழ்ந்து ஏற்கும் உயர்பண்பு அவளிடம் காணப்பெறும். தலைவன் பரத் தையர் வீடே புத்தேளிர் உலகம் எனக் கொண்டு ஆண்டிற்கு ஒரு முறை வரினும் கூட அவன் வரவை மழை வரவு போல மதிப்பாள். ஆராத் துவலை அளித்தது போலுநீ ஒர்யாட் டொருகால் வரவு' இதுவலை-துாற்றல்; ஒருகால்-ஒரு முறை ) தலைவன் வருவதற்கு முன்னே அவன் வரவை உடன்பட்டு ஏற்கலாகாது, நெஞ்சம் நெகிழ்தலாகாது, இன்முகம் காட்டலா காது என்று மனஉறுதி கொண்டிருப்பினும், அவனைக் கண்டதும் தன் கடனை உணர்கின்றாள்; அவனது குற்றங்களைமறக்கின்றாள். மாய மகிழ்நன் பரத்தமை நோவென் தோழி! கடன்நமக் கெனவே." தலைவனின் இழிவுப் போக்கை உணராதவள் அல்லள் என்பதைப் பல கவிப்பாடல்களால் அறியலாம். அவன் சிறந்த ஒழுக்கத்தன் என்று தன்னை ஏமாற்றிக் கொள்பவளும் அல்லள் என்பதையும் பல பாடல்களால் தெளியலாம். தலைவனை ஏற்று இன்புறல், இன்புறுத்தல் தனது கடன் என்ற ஓர் உயர் அறத்தையே கடைப் பிடிப்பவள் இளநாகனார் காட்டும் தலைவி. இக்கவிஞர் கோமானின் மருதக்கலியில்' பரத்தையர்க்கு முதன்மை இல்லை; தலைவனது பரத்தமைக்கும் முதல் இடம் இல்லை. தலைவனது புறத்தொழுக்கத்தையெல்லாம் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலப் பொறுத்துத் தாங்கி அவனுக்கு வாயில் நேர்ந்து பாயல் கொண்டு அணைந்து மகிழும் தலைவிக்கே முதன்மையான இடம். மருதக் கலிகள் சுரிதகத்தில் குறிஞ்சியாக முடிவதே இதனைத் தெளிவாக்கும். ہسمبس‘۔* 28,71, 29. டிெ-75 30. டிெ-88.