பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/555

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 539 கும்; அப்புதுப் புனல் நாணாகிய கரையை உடைத்துக் கொண்டு பகற் காலத்தில் ஓடிவரும் என்று அறிந்தேன்” என்று கூறி நகைத் தாள் கற்புக் கடம் பூண்ட காரிகை (கலி-98). கடவுள், குதிரை, யானை, புனல் இவை பலவகைப் பரத்தையர் எனக் கருதி ஊடல் மிகுந்தாள் தலைவி. இக்கலிப் பாக்களின் போக்கை ஆராய்ந்தால் தலைவன் உண்மையில் பரத்தன் அல்லன் என்பதும், பரத்தனாகப் படைத்து மொழிந்து ஊடற் கிளவி தொடுகின்றாள் என்பதும் தெளிவாகும். பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்த! நின் மார்பு.* (நண்ணேன்-பொருந்தேன்) என்று புலவி நுணுக்கம் கூறும் வள்ளுவரின் வாக்கையும் எண்ணுக. இளநாகனார் காட்டும் தலைவன் பரத்தனாயினும் பரத்த னல்லனாயினும் துணைவியின் ஊடலை மதித்துப் போற்றுபவன். இங்ஙனம் பரத்தன் என்று தன்னைப் பொய்படப் புனையுங்கால் இதனைக் காதற் பாங்கு என்று உணர்ந்து ஊடல் மிகத் தானும் உளறிக் கொட்டுவன். இத்தகைய ஊடலறிவு காதல் நம்பியர் கருத்திற் கொள்வார்களாக. மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையுங் காலை புலவியுள் քfիայ. ** என்பது தொல்காப்பியரின் புலவிக் கலை. சோராத காதல் பெருஞ் சுழிப்பில் இராமாநுச, நூற். 15) பொய் மெய்யாகும்: தாழ்வு உயர்வாகும. காதற் போர்க்களத்தில் கணவனின் அடிமையும் மனைவியின் தலைமையும் வெறியூட்டி இன்ப வெற்றியை நல்குகின்றன. இந்த உண்மையை நன்கறிவர் இளநாகனார். இந்த உண்மை இவர்தம் கலிப்பாடல்களில் காட்டும் அகத்திணைத் தலைவன் தலைவிமுன் செய்யும் பணி நிலைகளாலும் மொழியும் பணிவுரைகளாலும் தெளிவாகும். مسس ---- سیاس --سس۔ ساساس--ساس-سمصمماسہ“ 37. குறள்-1311 38. பொருளியல்-31