பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 அகத்திணைக் கொள்கைகள் போது முதற் பரத்தை கூட உள்ளம் நோகின்றாள் (ஐங்-42). கணவனது இழிவொழுக்கத்தைக் கண்டு எம்மனைவியும் மகிழ்த் திராள். ஒரம்போகியார் தலைவனது பரத்தமைக்கு உள்ளம் பொங்குவர்; சிறிதும் இசைந்து வாழ மனம் ஒருப்படார்; எதிர்ப்பும் காட்டுவர். மாநீர்ப் பொய்கை யாணர் ஊர! துயர்; நறியர்நின் பெண்டிர்; பேஎய் அனையம்யாம்; சேய்பயந் தனமே ' |மாநீர்-மிக்கநீர், யாணர்-புதுவருவாய்; நறியர்-மணம் கமழ் பவர்; சேய்-மகவு.) என்பது ஒருதலைவியின் கடிந்து கூறும் வல்லுரை. 'சின்னஞ்சிறு குழந்தை போல இங்ஙனம் நடந்து கொள்ளலாமோ? ஊர் சிரிக்கா தோ?’ என்பது ஒரு தலைவியின் அறிவுரை, சிறுவரின் இனைய செய்தி: நகாரோ பெரும நிற் கண்டிசி னோரே.* நகுதல் எள்ளி நகைத்தல்; கண்டிசினோர் - நினது தீ நெறிச் செலவினைக் கண்ட சான்றோர்). என்பது ஒரம்போகியாரின் வாக்கு. 'தாய்போற் களறித் தழிஇக் கோடல், ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப' (தொல். பொருள். கற். 32) என்பது இதற்குத் தொல்காப்பியர் கூறும் விதி. தற்கொண்டாற் பேணுதலும் தகைசான்ற சொற் காத்தலும் (குறள்-56) குலமகளின் கடமையாதலின் இங்கினம் தலைவனைக் கழறுதல் தலைவிக்கு அறமாயிற்று. இன்னொரு தலைவி, எம்நலம் தொலைவ தாயினும் துன்னலம் பெரும! பிறர்த் தோய்ந்த மார்பே.* துன்னலம் முங்குவேம் அல்லேம்) என்று கொதித்து மொழிகின்றாள். நின் தந்தை தாயரைக் காட்டிலும் ஒழுக்கத்தில் நின்னை இடித்துரைக்கும் உரிமை எம் தலைவிக்கு உண்டு என அமைதி காட்டுகின்றாள். (ஐங் 98). இங்ஙனம் பல்வேறு எதிர்ப்புத் தலைவியரைக் காட்டுவர் ஒரம்போகியார். 39. ஐங்குறு - 70 * 40. டிெ 85 . - 42. டிெ - 63