பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 543 ஒரம்போகியார் ஐங்குறு நூற்றில் படைத்துக் காட்டும் தலைவன் பரத்தையரே கதி என அவர் வீட்டில் கிடக்கும் "பண்ப்ாளன்'. நண்டு (21, 22, 23, முதலை (41), ஆமை (43, 44) நீர் நாய் (63), நாரை (70), எருமை 93, 99}, ஆகியவை, தலைவனது இழிபெருங் காமத்திற்கு உள்ளுறை உவமமாக அமை கின்றன. மணமான சின்னாட்களுக்குள் ஒரு தலைவன் பரத்தனா கின்றான் (22). நெடுந்தொலை சென்று பன்னாட்கள் தங்கி மீண்டு வந்த சின்னாட்களில் பரத்தமை எய்துகின்றான். பரத்தைய ருள்ளும் ஒருத்தினைய விட்டு மற்றொருத்தியை நாடுகின்றான் மற்றொருவன் (61). பரத்தையர் வீடே கதி என்று பன்னாள் தங்கி விடுகின்றான் பிறிதொருவன் (70), புறவொழுக்க அடையாளங் களுடன் இல்லம் திரும்புகின்றான் மற்றும் ஒரு தலைவன். ஒரம் போகியார் பாடல்களில் இங்ஙனம் பல்வேறுபட்ட பரத்தமைத் தலைவர்களைக் காண்கின்றோம். மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல் வண்டின் மாண்குனம் மகிழ்நன்கொண் டான்கொல் அன்ன தாகலும் அறியாள் எம்மொடு புலக்குமவன் புதல்வன் தாயே" இவ்வாறு தலைமகனது தண்டாப் பரத்தமையைக் கண்டு ஒரு பரத்தையே இறும்பூது எய்துகின்றாள் அவனது ஒழுக்க மின்மையை அவளும் பொறுக்கவில்லை. ஆயினும், ஒர் எல்லையை அடைந்தபின், திருந்துவதே வாழ்வு என்று எண்ணும் நல்ல தலைவர்களையும் காட்டுகின்றார் ஓரம்போகியார். பரத்தமை எல்லை கண்டு நுகர்ந்த தலைமகன் ஒருவன் அதனைக் கைவிட முயல்கின்றான். - தண்டுறை யூரன் தெளிப்பவும் உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்" ‘புறத்தொழுக்கம் இனி எனக்கு இல்லை என்று தலைமகன் தெளிப்பவும், உண்கண் பசப்பது சரியன்று எனத் தோழி தலைவி யைத் தெருட்டுகின்றாள். பரத்தமையை முற்றிலும் கடிந்த தலைவர்களை ஐந்து செய்யுட்களில் காண்கின்றோம்." இத் தகைய தலைவர்களைக் கொண்டு கவிஞர் நூலைத் தொடங்குத லால் எந்நிலையரும் நன்னிலைக்குத் திரும்பலாம்; திரும். வேண்டும் என்பது இவர்தம் கருத்தாதல் தெளிவு. 43. டிெ - 44. டிெ - 21 45. டிெ (4-5)