பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 547 வனுக்கு மணம் பேசத் துணிந்தனர். இதனைச் செவியுறுகின்றாள் இளமங்கை மனம் கலங்குகின்றாள்; யாதும் பேசிற்றிலள்; பாலும் உண்ணாது பழங்கண் கொண்டிருக்கின்றாள். தண்ணத் துறைவன் நல்கின் ஒண்ணுதல் அரிவை பாலா ரும்மே." (நல்கின்-தண்ணளி செய்யின்; பால்ஆரும்-பால் பருகுவாள்) இது தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. துறைவன் நல்கின் பாலாரும், நல்கானாயின் இறந்துபடும்’ என்கின்றாள். இது குறிப்பெச்சம். . . இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியர்எம் கணவனை யானா கியர்நின் நெஞ்சு நேர்பவளே." (இம்மை-இப்பிறப்பு மறுமை-வேறு பிறப்பு: நீஆகியர்-நீயே ஆகுக, யான் ஆகியர்-யான் ஆகுக: நெஞ்சு நேர்பவள். மனத்திற்கு ஒத்த காதலி) இது ஒரு தலைவியின் மன உறுதி. தலைவன் பெரும்பரத்தன். இவன் இன்பத்துறையில் எளியன் ஆயினும் தலைவி நெஞ்சு மாறிற்றிலள்; இல்லறத்தையும் துறந்திலள். தம்முடைய அன்பு பிறவிதோறும் தொடரவேண்டும் என்ற பெரு விருப்பினள். இதுவே தமிழர் கண்ட இல்லற நாகரிகம். இம்மை மாறி மறுமையாயினும்’ என்ற உறுதித் தொடரைக் கேட்கும் எந்த ஆடவனது மனமும் சிறிதாவது சிந்திக்குமன்றோ? மானம் மிக்க ஆண்தகை சிந்திப்பான் என்று சொல்லவும் வேண்டுமா? ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத் தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் வேண்டினாள் தொழுது, என்று விளம்புவாய்." என்று சீதையின் வாயில் வைத்துத் தமிழர் கண்ட இல்லற நாகரிகத்தைப் பேசுவான் கம்பன். 51. ஐங். 168. 52. குறுந். 49 : 53. கம்ப. சுந்தர. சூளா. 35