பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/564

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


548 அகத்திணைக் கொள்கைகள் சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிதாகுவ தாயின் மறக்குவேன் கொல்என் காதலன்' எனவே," *தான் இறப்பதற்கு அஞ்சுகிற்பேன் அல்லேன்; அவ்வாறு இறந்துழி இனிவரும் பிறப்பு மக்கட் பிறப்பின்றி வேறொரு பிறப்பாகி மாறிவிடின் என் காதலனை அப்போது மறப்பேனோ என்று அவ்வொன்றனுக்கே அஞ்சி" நிற்பேன்’ என்று கழறு கின்றாள் இன்னொரு தலைவி. இங்ஙனம் பெண்ணுள்ளத்தைத் தமிழ்ச் சமுதாயம் வளர்த்த மாண்பு இது. விழுமியோர் நட்புபற்றிச் சங்கச் சான்றோர் பெரிது, உயர்ந்தது, இனிமைபயப்பது, எனக் சாற்றியுள்ளனர். நிலத்தினும் பெரிதே' வானினும் உயர்ந்தன்று: நீரினும் ஆரள வின்றே." என்று குறுந்தொகையும், தாமரைத் தண்தாது ஊதி, மீமிசைச் சாந்தில் தொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை;" என்று நற்றிணையும் கூறுதல் காணலாம். அம் மூவனார், கடலினும் பெரிதெமக்கு அவருடை நட்பே." என்று கூறுவர். தலைவனை விட்டுத் தலைவி வாழ இயலாதவள்; அவனது அருளையே நாடுபவள் என்பதை அம்மூவனார் அழகிய உவமங் கொண்டு புலப்படுத்துவர். x - தாய்உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு "அன்னாய்’ என்னும் குழவி போல . இன்னா செயினும் இனிதுதலை அளிப்பினும் நின்வரைப் பினள், என் தோழி; தன்னுறு விழுமம் களைளுரோ இலளே." 54. நற். 397. 55. குறுந் 3 56. நற். 1 57. ஐங். 184 58. குறுந் 391.