பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 549 (உடன்று-மாறுபட்டு; அலைத்தல்-வருத்துதல்; இன்னாஇன்னாதவற்றை தலையளிப்பினும்-தலையளி செய் தாலும்; வரைப்பினள்-எல்லைக் குட்பட்டவள்; விழுமம்துன்பம்; களைஞர்- நீக்குபவர்) அன்னை அலைப்பினும், அணைப்பார் பிறரின்றி அவள் மாட்டே செல்லும் குழவிபோல, நீ அருளின்றிப் பிரியினும் நின்மாட்டே செல்லும் காதலுடையாள் தலைவி என்று உவமையை விரித்து மகிழ்க. அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன் றிருந்தேனே." |அரிசினம்-மிகுந்த கோபம்) என்ற குலசேகரப் பெருமாள் பாசுரத்திலும் இக்கருத்து பிரதிபலிப் பதைக் காணலாம். அம்மூவனார் தினைக் கலப்பு மணத்தைப் தம் பாடல்களில் குறிப்பிடுகின்றார். உமணக்குடி குமரியர் இருவர் இவர்தம் இரு பாடல்களில் தலைவியராக வருகின்றனர். தந்தையோடு மலை நாட்டிற்கு உப்பு விற்கச் செல்லுகின்றாள் ஓர் உமணப் பெண் நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனப் பண்டமாற்று விலையைப் பகர்கின்றாள். சங்கு வளையல்கள் ஒலிப்ப விசி நடக்கும் அவள் ஒசிந்த நடையிலும், ஒலி வேற்றுமை அறியும் மனையிலுள்ள நாய் வேற்றுக்குரலென்று குரைக்கக் கேட்டு வெருவும் அவள் மருண்ட பார்வையிலும் உள்ளத்தைப் பறிகொடுக் கின்றான். உப்பு வண்டியை இழுத்துச் செல்லும் காளைபோல் வெய்துயிர்க்கின்றான். இயற்கைப் புணர்ச்சியும் நடைபெற்று விடுகின்றது. இவன் இதனைப் பாங்கனுக்கு உரைப்பதாகப் பாடல் தொடுத்துள்ளார் அம்மூவனார்." இது நெய்தல் தலைவிக்கும் குறிஞ்சித் தலைவனுக்கும் இடையே நடைபெற்ற காதல் தொடுப்பு. 59. பெரு. திரு. 5:1 60. அகம்.140.