பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/566

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


550 அகத்திணைக் கொள்கைகள் நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளி ரோவெனச் சேரிதொறும் நுவலும் அவ்வாங் குந்தி அமைத்தோ ளாய்நின் மெய்வாள் உப்பின் விலைஎய் யாம்" (நேரே-ஒப்பாகும்; துவலும்-கூறி விற்கும்; அ-அழகிய வாங்கு உந்தி-வளைந்த கொம்பூழ், அமைதோள்-மூங்கில் போன்ற தோள்; எய்யாம்-அறிந்திலம்.) இதுவும் ஒரு கலப்புமணப் பாட்டு. நெய்தல் தலைவிக்கும். முல்லைத் தலைவனுக்கும் நிகழும் காதலைப் புனைந்துகாட்டுவது. 'நெல்லுக்கு உப்பு நேர்' என்று கூவி விற்கும் உமணக் குமரியைக் கண்டு, கடலுப்பின் விலையைக் கூறினாய்; அறிந்தேன். நின் மெய் வாழ் உப்பின் விலைதான் தெரிந்திலது’ என்று குறும்பாகக் கேட்பவன்போல் காதற் குறிப்பால் கேட்டான். இரட்டுறமொழி தலாகச் சொல்லைப் பயன்படுத்தல் சங்க காலத்தில் அருகிய வழக்கு. ஈண்டு உப்பு என்பது புணர்ச்சி இன்பத்தைக் குறிக்கும் ஊடிப் பெருகுவங் கொல்லோ நுதல் வியர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு." என்ற குறளில் உப்பு' என்னும் சொல் இன்பம் என்ற பொருளில் வழங்கியுள்ளமை அறிக. புணர்ச்சியினால் தோன்றிய வியர்வை உலர்ந்து படிந்த உப்பு பின்னர் இன்பம் என்ற பொருளைப் பெற்றது. 'மாணலந் தா என வகுத்தலை'த் தோழிக்குரிய கூற்றாகக் கூறுவர் தொல்காப்பியர். அதாவது தோழி தலைவனிடம் சினந்து பேசுங்கால் 'நீ முன்போல் நன்முறையில் பழகவில்லை. ஆதலின் எம்பால் பெற்ற இன்பத்தினைத் தந்து செல்வாயாக’ என உரைப் பதாகும். இத்தகைய போக்கு அன்பின் அடிப்படையில் அமைவ தாகும். இளஞ்சிறார்களிடையே சிறு பூசல் நிகழுங்கால் கொடுத்த பொருளைத் திரும்பக் கேட்கும் இத்தகு போக்கைக் காணலாம். தொல்காப்பியர் வகுத்த இந்நெறியைப் பின்பற்றி அம்மூவனார் இரண்டு பாக்கள் யாத்துள்ளார். - - . . 61. ഞു.-390. 62. குறள்-1328 63. கற்பியல்-9