பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/569

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 553 கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் தங்காது தகைவின்றித் தாம்செய்யும் வினைகளுள் நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை." “நின் மறைவை யாரும் அறியார் என்று நாள் கடத்த வேண்டாம் தன்நெஞ்சு தன் செயலை அறியவேண்டுமன்றோ?' என்று தோழி தலைவனை இடித்துரைக்கின்றாள். இதனால் தலைவன் எவ்வளவு நாள் களவினை நீட்டித்திருக்க வேண்டும் என்பது புலப்படுகின்ற தன்றோ? 'மலர்கள் பூத்துக் குலுங்கும் புன்னை நறும் பொழிவில் ஒருத்தியின் புதுநலத்தைத் துய்த்த நீ மணவரைவை நாடிற்றிலை; நின் குடிமைக்கும் வாம்மைக்கும் புகழ்மைக்கும் பெரிய பழி யில்லையா?' என்று தோழி தலைவனை அடுக்கிக் கேட்கின்றாள் (கலி-132). இதனாலும் தலைவன் களவியலில் மிகுதியாக ஒழுகும் நாட்டமுடையவன் என்பதை உணர முடிகின்றது. பெண்ணலத் தையுண்டு அவளை மணவாது கைவிடுதல் பாலையுண்பவர்கள் பாலையுண்டு அதனைக் கொண்டிருக்கும் குவளையைக் கவிழ்த்து விடுத்ல் போலாகும் எனவும் (கலி - 133), நோய்க்கு மருந்து இன்ன தென்பதை அறிந்தும் பணம் கருதிக் காலத்தை நீட்டிக்கும் மருத்துவன் போலாம் எனவும் (கலி - 129 தோழி கசந்து கூறு: கால் அவளது வருத்த உணர்ச்சி தெளிவாகின்றது. நாணினகொல் தோழி நாணினகொல் தோழி இரவெலாம் நற்றோழி நாணின என்பவை வாணிலா ஏய்க்கும் வயங்கொளி எக்கர்மேல் ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம் கானற் கமழ்ஞாழல் வீயேய்ப்பத் தோழிஎன் மேனி சிதைத்தான் துறை." (வாள்நிலா - ஒளியையுடைய நிலா, ஏய்க்கும் - ஒக்கும்: வயங்கு ஒளி - விளங்குகின்ற ஒளி, எக்கர் - மணல்மேடு; அலவன் - நண்டு; அளை - வளை, கானல் - கடற்கரை, ஞாழல் வீ - தாழம் பூ; ஏய்ப்ப ஒப்ப; மேனி - உடல்) சிறந்த இலக்கிய நயம் செறிந்த நெய்தல் இலக்கியத்திற்கு ஒர் எடுத்துக்காட்டான பாடல் இது. களவை நீட்டித்தற்கு நாணித் தலை குனிய வேண்டியவன் தலைவன்; காதலியின் மேனி மெலி 67. கவி-125, 68. டிெ 131