பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


களவு பற்றிய விளக்கம் - களவாவது, பிணி மூப்புகளின்றி, எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய், உருவும் திருவும் பருவமும் குலனுங் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமையுடையராய தலைமகனும் தலைமகளும், பிறர் கொடுப்பவும் அடுப்பவுமின்றி, ஊழ்வகை யால் தாமே எதிர்பட்டுக் கூடுவது. தமது மகள் பிறர்க்கு உரியள் என்று இரு முதுகுரவரால் (பெற்றோரால்) கொடை எதிர்தற் குரிய தலைவியை, அவர் கொடுப்பக் கொள்ளாது, இருவரும் கரந்த உள்ளத்தோடு எதிர்பட்டுப் புணர்தலின், களவு எனப் பெயர் பெற்றது. இக்களவு அன்பொடு புணர்ந்த தாதலின் காமக் கூட்டம் என்றும் வழங்கப்பெறும். இன்னும் இதனை 'மறைந்த ஒழுக்கம்’, மறை அரும்மறை என்ற சொற்களாலும் தொல்காப்பியர் குறிப்பர். களவு என்பதற்குப் பிறர்க்குரிய பொருளை மறையிற் கோடல் என்று பொருள் கூறுவர் இளம் பூரணர்." வேதத்தை 'மறை நூல் என்று சொல்வது போலவே, அறநிலை வழுவாமல் காதலர்கள் கரந்து ஒழுகும் இதனைக் களவு என்று பண்டை யோர் குறித்தனர் என்பது அறியத்தக்கது. களவு என்னும் சொற் கேட்டுக் களவு தீதென்பது உம், காமம் என்னும் சொற் கேட்டுக் காமம் தீதென்பது உம் அன்று; மற்று அவை நல்ல ஆமாறும் உண்டு' என்று களவியலுரையாசிரியர் கூறுவதையும், அதற்கு அவர் கூறும் சான்றுகளையும் இவ்விடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பெண் தன் உறவினரோடு சண்டையிட்டுக் கொண்டு நஞ்சுண்டு சாவதற்குத் தீர்மானம் செய்து, சமயம் - 1. களவியல்-1 (உரை) 2. இறை. கள. இன் உரை.