பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/574

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


558 அகத்திணைக் கொள்கைகள் கணவன் விரைந்து வந்ததனால் காமப் பிணியும் நுதல் பசப்பும் நீங்கின (கலி-144), பாயல் கொள்ளாது உறக்கத்தைக் கெடுத்த வன் வரக் கண்டதும் மாயவன் மார்பிலுள்ள திருமகள்போல் அவன் மார்பை ஆரத்தழுவ, ஞாயிற்று முன்னர் இருள் கெடுவது போல் அவளது காமத்துயர் சுவடற்று மறைந்தொழிந்தது (கவி. 145), கோடையில் மழைத் துளி பெற்ற வானம்பாடிபோல், நல்லெழில் மார்பன் முயங்க ஆயிழை பண்பு தளிர்த்தாள் (கவி-146) பிரிவுற்ற காதலன் வந்ததும் தலைவியின் அழுந்தின துயரம் எல்லாம் மறைந்தது; போன நாணம் மீண்டது; பித்துச் சிரிப்பும் ஒழிந்தது (கலி-147) என்று இறுதிச் சுரிதகங்கள் குறிஞ்சியாக முடி கின்றன. இப்படித்தான் பெருந்திணைப் பாடல்கள் இறவேண்டும் என்பதை அந்துவனாரின் பாடல்கள் அறுதியிடுகின்றன; இங்ஙனம் புணர்தலாக முடிவதுதான் பெருந்திணைப் பாடல்களின் மாறாப் பண்பு ஆகும். தலைவனது வரவு கூறாது தலைவியின் புலம்பல் களையே விளம்பிச் செல்வது பெருந்திணைப் பாடலின் இலக்கணம் ஆகாது. - பெருந்திணைத் தலைவி ஒருத்தி பேசுகின்றாள். மகளிர் - தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர நீத்தலும் நீள்சுரம் போகியார் வல்லைவந் தளித்தலும் ஊழ்செய் திரவும் பகலும்போல் வேறாகி வீழ்வார்கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் வாழ்வார்கட் கெல்லாம் வரும்' (மாந்தர்-ஆடவர்; துயர்கூர-வருத்தம் மிக நீத்தல்-பிரிதல்: சுரம்-பாலை நிலம்; வல்லை-விரைவாக அளித்தல்-அருள் செய்தல்; வீழ்வார்கள்-விரும்புவார்கள்) இரவும் பகலும்போல, காதலர்தம் வாழ்க்கையில் பிரிவும் புணர் வும், இன்பமும் துன்பமும், மாறி மாறி வரும். புணர்ந்து இன்புற்ற வர்கள் பிரிந்து துன்புறுபவர்களை இகழ்தல் ஆகாது; அங்ஙனம் இகழின் அவர்க்கும் ஒரு நாள் பிரிவும் இகழ்வும் வரும் என்பது உலக இயல்பு. இங்ஙனம் 'சகடக்கால்போலவரும்' அரியதோர் அறத்தை அந்துவனார் பெருந்திணைப் பாடலில் அனைவர்க்கும் உணர்த்துவர். - 71. ബ്ലേ-145. 72. நாலடி-2.