பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/575

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 559 (ix). ஓதல் ஆந்தையார் இப்புலவர் பெருமகனார் 103 அகப்பாடல்களை நல்கியுள்ளார். இவர் புறம்பாடாப் புலவர். களவில் இவர் பாடல்களில் பாங்கன் இடம் பெறவில்லை. கற்பில் தலைவன், தோழி, தலைவி என்ற மூவருமே இடம் பெறுகின்றனர். பாலைத் திணைத் துறைகளைப் பல படவும் பண்படவும் வடித்துக் காட்டும் திறனுடையவர்: உடன் போக்குத் துறைகளை அமைத்துக் காட்டுவதில் நிகரற்ற வராகத் திகழ்கின்றார்; தாயின் புலம்பல்களை மிகச் சிறப்பாக உணர்த்துகின்றார். உடன்போக்கில் தலைவனும் தலைவியும் கூடியிருப்பினும், இன்னும் திருமணம் ஆகாதவர்களானமையால் பிரிவோமோ பெற்றோரால் பிரிக்கப் பெறுவோமோ என்ற பிரிவுணர்ச்சி இருவர் தம் உள்ளத்தே ஊடுருவிச் சென்று கொண்டிருக்குமாதலின் உடன் போக்கு குறிஞ்சித் திணையின்பாற்படாமல் பாலைத் திணையா யிற்று. இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக் கடைகொண்டு பெயர்தலின் கலங்களுர் எய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை' என்றலின் உடன் போக்கில் உள்ளத்துயர் உண்டு என்பது அறியப் பெறும். இவர் இந்தக் களவுப் பாலையையும் கற்புப் பாலையை யும் அறமும் திறமும் பொருந்தப் பாடியதனால் சிறந்த பாலைப் புலவராகத் திகழ்கின்றார். இவர்தம் ஐங்குறு நூற்றுப் பாலைத் திணைப் பாடல்களால் கற்றோர்க்கு அகத்திணை இலக்கிய வளத் தின் பெருமை தெளிவாகும். மரபுநிலை திரியாமல் அகத்துறை களைப் படைத்துக் காட்டலாம் என்ற புத்தாற்றல் தோன்றும். குறுந்தொகையில் ஒரு பாடல். தான் திரும்புவதற்குரிய கால மாகத் தலைவன் குறித்துச் சென்ற கார்ப்பருவத்தைக் கண்டு தலைவி வருந்துவாள் எனக் கவன்ற தோழியை நோக்கித் தலைவி, கானம் காரெனக் கூறினும் - யானோ தேரேனவர் பொய்வழங் கலரே. * 73. அகத்திணை.44 (இளம்) 74. குறுந்-21.