பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/579

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திணையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 563 துறைக்கு இடம் தரவில்லை. உடன் போக்கு சிறந்த களவுப்பாலை யாகும். நற்றாயின் புலம்பல்களை இத்துறையில் கேட்டுமகிழலாம். அவலச்சுவை மிக்க பாடல்களைப் புனைவதற்கு இங்கு அதிக வாய்ப்பு உண்டு. சந்தனம் பூசிக்கொள்வார்க்கன்றித் தான் பிறந்த மலையிடத்திற்குப் பயன்படாதவாறு போலவும், முத்துக்கள் அணிவார்க்குப் பயன்தர வல்லவேயன்றின தாம் தோன்றின கடலுக்குப் பயன்படாதன வாறுபோலவும், ஏழு நரம்பின் இனிய ஒசைகள் பாடுவார்க்குப் பயன்படுவனவேயன்றி தாம் பிறந்த யாழிற்குப் பயன்படாதனவாறு போலவும் தும்மகளும் பயன்படுங் காலத்து நுமக்குப் பயன்படாள்; கற்புக்கடம் பூண்டு கணவனோடு சென்றாள்' (கவி-9) என்று முக்கோற்பகவர் அறங்கூறும் களவுத் துறையில் செவிலித்தாய் இடம் பெறுகின்றாள். 35 பாலைக் கலி யிலும் களவுத்துறையில் வரும் பாடல் இஃது ஒன்றேயாகும். ஆயினும், பிறதொகை நூல்களில் இத்துறைபற்றிய பெருங் கடுங்கோவின் பாடல்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. பாலையின் சில காட்சிகளைப் பிரிவுத் துறைகளில் இடங்கட் கேற்பப் புனைந்து காட்டலில் வல்லவர் பெருங்கடுங்கோ. பிரிந்து சென்ற தலைவன் காட்டில் செங்காற்பல்லித் தன் துணையை அழைத்தலையும் (குறுந்-16', ஆண்யானை தன் பிடிக்கு யாமரத்தின் பட்டையை உரித்து நீரைப் பருகச் செய்வதையும் (குறுந்-37), கன்றொடு மடப்பிடியைத் தழுவிய தடக்கை வேழம் வேங்கையின் பொன்போன்ற பூங்கொத்தாலாகிய கவளத்தை ஊட்டுதலையும் (நற்-202), ஆண் யானையின் பிளிறலைக் கேட்ட பெண் யானை புலம்புதலையும் (நற்-318), குடம்பையின்கண்ணே பார்ப்புகளை ஈன்று அவற்றிற்குக் காவலாயுள்ள புறவின் வயவுநடைப் பேடை உண்ணுமாறு அதன் செங்காற் சேவல் முதுபாழில் தானே விளைந்து உதிர்ந்த நெற்கதிர்களைக் கொடுத்தலையும் (நற்-384) ஞெமை மரத்தின்மீதுள்ள சிலம்பிக் கூடு மேல்காற்றால் அசைய அதனை மேகம் எனக் கருதி மயங்கும் யானைகளைக் காணும் தலைவர்தாம் பொருளல்லதனைப் பொருளாகக் கருதியதனை நினைவர் என்பதையும் (அகம்-111), நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் சென்றஇடத்தில் தங்கார்; தண்ணிய நறிய குவளை மலர் மாலைசூட்டிய நின் கூந்தலில் பொருந்திய துயிலை நம்மிடத்தே தங்கிப் பெறுதலை மறந்து ஆண்டுத்துயிலுதல் இயலுமோ? என்று கூறுவதையும் (அகம் 223) எடுத்துக்காட்டி விரைவில் அவர்திரும்பி விடுவார் என்று தலைவன் பிரிவால் வருந்தி நிற்கும் தலைவியை