பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$64 அகத்திணைக் கொள்கைகள் ஆற்றுவிக்கும் தோழியைக் காண்கின்றோம். பெருங் கடுங் கோவின் 67 பாடல்களில் 40 பாடல்கள் தோழி கூற்றாக அமைத் திருக்கும் அருமைப்பாட்டைக் கண்டு மகிழ்கின்றோம். தலைவியின் ஆராக் காதலைத் தலைவனுக்கு எடுத்துக் காட்டி அன்பாலும் அச்சத்தாலும் அவன் செலவை அழுங்குவித்தாள் எனப் பல பாடல்கள் அமைகின்றன. உடன்போக்குக் காட்சிகளை மிக்க அருமைப்பாட்டுடன் சித்தரிப்பர் பெருங் கடுங்கோ. பாதிரியின் மலரைத் தலைவியின் கூந்தலுக்குள் செருகி அக் கூந்தலின்மீது மாமலரைச் சூட்டினான் தலைவன். நின் வளையல்கள் ஒலிக்கக் கை வீசவும், சிலம்பொலி கேட்க மெல்லிய அன்ன நடைகொண்டும் சிறிது முன்னே நட, நின் பின்னழகைக் கண்டு மகிழ்வேன்' என்று தலைவன் தலைவியை வேண்டுகின்றான். தலைவன் முன்னே செல்வதும் தலைவி பின்னே ஒதுங்குவதுதான் தமிழ்ச் சமுதாய வழக்கு. ஆதலின், தலைவி வழக்கத்திற்கு மாறாக முன்னே செல்ல நாணினாள்; தலை குனிந்தாள். அதுகண்டு தலைவனும் முன்னே செல்லாது நின்று கொண்டான். யார் முன் செல்வது என்ற பூசலில் இருவரும் நடவாமல் உட்கார்ந்து விட்டனர். இக்காட்சியைக் கவிஞர், அணிமாண் சிறுபுறம் காண்கம் சிறுநணி ஏகென, ஏகல் நாணி ஒய்யென மாகொல் நோக்கமொடு மடங் கொளச் சாஅய் நின்றுதலை யிறைஞ்சி யோளே அதுகண்டு யாமுந் துறுதல் செல்லேம் ஆயிடை அருஞ்சுரத் தல்கி யேமே' (அணிமாண்-அழகு மாண்புற்ற சிறுபுறம்-முதுகு சிறுநணி. சிறிது தூரம்; ஏகல் - செல்லல்; ஒய்யென - விரைவாக, மாகொள் - மானையொத்த சாஅய் - தலை இறைஞ்சி முந்துறுதல் - முன்னே செல்லல்; ஆயிடை - அவ்விடத் திலேயே; அல்கியேம் - தங்கினோம்) என்று காட்டுவர். உடன் போக்கின் தொடக்கத்துத் தலைவன் காதலிக்குச் சுட்டும் காட்சியை நற்றிணையில் காணலாம். கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள் 77. அகம்-261