பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 அகத்திணைக் கொள்கைகள் அமரிடை உறுதர நீக்கிநீர் எமரிடை உறுதர ஒளித்த காடே." (புறவு-காடு; அணிகொண்ட-அழகமைந்த, பூநாறும்-மலர் மணம் வீசும்: கிடின்-ஒருவித ஓசை; தொடி-வீரவளை, வடி-கூர்மை; உறுதர-வந்த பொழுது) இதில் இரண்டு செய்திகள் வருகின்றன. முதற்கண் தலைவனுக்கும் மறவர்கட்கும் உண்டான போரில் தலைவன் வெல்லுகின்றான். அதன்பின்னர் தலைவியின் சுற்றத்தார் வருவதைக் கண்டு, காட்டிற்குள் ஒளிந்து கொள்ளுகின்றான்." அமர்வரின் அஞ்சேன் பெயர்குவென் உமர்வரின் மறைகுவென் மா.ஆ யோளே” (அமர்.போர் (ஆறலைக் கள்வருடன்); உமர்-நின் உறவினர்) என்ற மதுரை மருதனிள நாகனார் பாடலில் இரண்டாவது கருத்து வந்துள்ளதைக் காணலாம். தலைவன் வீரன் என்பதையும், வீரமும் காதலும் உறழ்ந்த போது காதலுக்காக வீரத்தை மறைத்துக் கொள்ளுபவன் என்பதையும் அறிகின்றோம். இந்த எடுத்துக்காட்டுகள், இடைச்சுரம் மருங்கின் அவள்தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்தலில்' (மருங்கு-இடை, தமர்-உறவினர்; கடை-பின்; பெயர்தல். நீங்கல்} என்ற தொல்காப்பியரின் குறிப்பிற்கு இலக்கியங்களாகின்றன. அகத்திணை ஒரு சிறந்த காதல் திணை. இளமை காதல் பருவம். ஆதலின் கடமைக்கேனும் பிரிவதை அக விலக்கியம் உடன்பட்டுப் பாடாது. பிரிவது நுவலினும் பிரிவுணர்ச்சியுள் புணர்வெண்ணம் இழையோடும். தனி இயற்கையைச் சான்றோர் 88 நற். 48. 89. மருதன் இளநாகனார் நற்றிணையில் (பாடல் 362) இந்த இரு செய்திகளையும், ஒத்ல்ாந்தையார் ஐங்குறு நூற்றில் (பாடல்-312) இரண்டாவது செய்தியை மட்டிலும் குறிப் பிட்டுள்ளனர். 90. நற்.362 91. அகத்திணை-44