பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/590

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


574 அகத்திணைக் கொள்கைகள் யாம்மடல் ஊர்தும் எம்மாழி அங்கைப் பிரானுடை தூமடல் தண்ணந் துழாய்மலர் கொண்டு சூடுவோம் யாம்மடம் இன்றித் தெருவி தோறயல் தையலார் நாமடங் காப்பழி துற்றி நாடும் இரைக்கவே." (ஆழி-சக்கரம்; தூமடல்-பரிசுத்தமான இதழ் மடம்ஒடுக்கம், தையலார்-பெண்கள். நா மடங்காப் பழி-நாக்கு இடைவிடாது சொல்லும் பழிமொழி: இரைக்க-இரைச்சல் போகும்படி! ன்றும் கூறுவது ஈண்டு ஒப்புநோக்கி அறியத் தக்கது. எனவே ஆழ்வார்கள் தமிழ் நெறியினை அறியாது கூறினர் என்று கொள் வதற்கில்லை. ஆகவே, ஆழ்வார்கள் கூற்றினைப் புரட்சிப் போக்கு என்று சொல்வதும் ஒவ்வாது. திருமங்கை ஆழ்வார் தாம் தமிழ் நெறியினை அறிந்திருப்ப தாகவும், வடமொழி நெறியினைப் பின்பற்றியே இத்துணிவினை மேற்கொண்டதாகவும் கூறுகின்றார். மான்நோக்கின் அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல் மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும் தொன்னுரையில் கேட்டறிவ துண்டு.அதனையாம்தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம்." (அலர்-பழிச்சொல், ஏ.ச.துாற்ற: தெளியோம்-நினைக்க மாட்டோம்) என்று பெரிய திருமடல் பகுதியால் இதனை அறியலாம். "மடலூர்தல் என்பது ஆசை மிகுதியால் மேற்கொள்ளும் செயல், ஆசையை வரம்பிட்டுக் காக்க யாராலும் இயலாது. அரசராணைக் கும் அது கட்டுப்படுமோ? வேலியடைத்தால் நிற்குமோ வேட்கை? அளவு கடந்த வேட்கையின் காரணமாக விளையக் கடவதான 6. ഞു.-5.3:10 7. பெரிய திருமடல்.