பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 அகத்திணைக் கொள்கைகள் வெறியாடலால் அலராகுமே எனத் தலைவி மனம் கவல்கின்றாள். தோழி அவளைத் தேற்றுகின்றாள். தாயரின் செயலைத் தடுப்பதற்காக நடுவீட்டிற்கே வந்து விடுகின்றாள். தோழி வேலனை நோக்கி இவ்வாறு பேசுகின்றாள்: 'இந்த நங்கைக்கு இப்போது நேர்ந்துள்ள நோய் சிறு தெய்வடிம யாக வந்ததன்று; கூராழி வெண் சங்கேந்தி வரும் கழிபெருந் தெய்வத்தால் உண்டானது. இத் திருமாளிகை தேவதாந்தரபரர் புகும் திருமாளிகையன்று காண். ஆகவே, உன் வெறியாடலை நிறுத்துக; கடையையும் கட்டுக' என்கின்றாள். இங்கே இன்சுவை மிக்க பெரியவாச்சான் பிள்ளையின் உரையும் காணத் தக்கது; 'அர்த்த ரஹிதமான மொழி கேட்கும் இளந் தெய்வம் அன்று இது; தனக்கு இல்லாததை உண்டாகக் சொல்லப்புக்கால் கேட்டுக் கொண்டாடும் தெய்வம் அன்று இது கைக் கூலி கொடுத்துக் கவிபாடுவித்துக் கொள்ளும் தேவதைகளன்று' என்பது. உடனே குழுமியிருக்கும் பெண்கள்பக்கம் திரும்பி இவ்வாறு பேசுகின்றாள்: அன்னைமீர்! நீங்கள் மூத்தவர்களேயாயினும், நான் அகவையில்சிறியவளாயினும், இவள்தன்மையை உண்மையாக அறிந்தவளாதால் என் சொற்களைக் கேட்பீர்களாக. உலகேழும் உண்டானின் திருநாமத்தைச் சொல்லுதலைச் செய்து கொண்டு அவனது அழகிய குளிர்ந்த திருத்துழாயைச் சூட்டுவீர்களாக என்கின்றாள். 'ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட, பெருந் தேவன பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே' என்று திருவாய்மொழியிலும் பேசுவர் இவ்வாழ்வார். நோயாளி கட்கு உட்செலுத்துவதொரு மருந்தும் மேலிற் பூசுவதொரு மருந்தும் பயன்படுத்துவது போல எம்பெருமானது திருநாமங்களை அவள் செவிவழியே உள்புகும்படி உச்சரித்து, மேலுக்கு அவன் அணிந்து கொண்ட திருத்துழாய் மாலையைக் கொணர்ந்து சூட்டுங்கள் என்று பரிகாரம் கூறுகின்றாள் தோழி. மேலும், திருவாய்மொழிப் பாசுரங்களும் ஈண்டு அறியத் தக்கன. திசைக்கின்ற தேயிவள் நோய்இது மிக்கபெருந் தெய்வம் இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது 9. திருவாய் 4, 6: 4.