பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/593

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


துறையால் சிறப்புப் பெயர் பெற்றோர் 577 திசைப்பின்றி யேசங்கு சக்கரம் என்றிவள் கேட்கநீர் இசைக்கிற் றிராகில் நன்றேஇல் பெறும்;இது காண்மினே." (திசைக்கின்றதே - அறிவு கெட்டதே இசைப்பு - தகுதி: அணங்காடும் - வெறியாடும்: திசைப்பு - மனக் குழப்பம்: கேட்க - காதில் விழும்படியாக இசைக்கிற்றீர் ஆகில் - சொல்ல வல்லவர் ஆனால், நன்றே - நலமாகவே இல் - குடியிருப்பு] 'இவள் நோய் தீர வேண்டுமாகில் மனக் குழப்பமின்றி எம் பெருமானுடைய திவ்வியாயுதங்களை இவள் செவிப்படுமாறு சொல்லுவதே யாகும்’ என்கின்றாள். இவ்விடத்தில் ஒர் ஐதிகம் பட்டர் காலத்தில் ஆய்ச்சிமகன் என்றொரு பாகவதர்; அவர் நோவு கண்டு உணர்ச்சியற்றுக் கிடக்கும் காலத்தில் பட்டர் அவரைப் பார்க்க எழுந்தருளினாராம்; அப்போது அந்த ஆய்ச்சி மகன் அடியோடு அறிவு நடையாடாதபடி இருப்பதைக் கண்ட பட்டர் அவர் அழகிய மணவாளனிடத்தில் மிக்க பக்தியுடையவர் என்பது காரணமாக அவருடைய திருச் செவியிலே மெல்ல ஊதினாப் போலே அழகிய மணவாளப் பெருமாளே சரணம்’ என்றாராம்; அதனால் உணர்ச்சியுண்டாய் நெடும்போதெல்லாம் அவர் அந்தச் சொல்லையே சொல்லிக் கொண்டிருந்தாராம். என்பது. இதுகாண்மின் அன்னைமீர் இக்கட்டு விச்சிசொல் கொண்டுநீர் எதுவானும் செய்து அங்கோர் கள்ளுமிரைச்சியும் துவேன்மின்: மதுவார் துழாய்முடி மாயப் பிரான்கழல் வாழ்த்தினால் அதுவே இவள் உற்ற நோய்க்கும் அருமருந்து ஆகுமே.”* (எதுவானும் - கெட்டதாக இருப்பினும்; துரவேல்மின் - ஆராதனையாக வைத்தல் வேண்டா, மது ஆர் - தேன் 10. டிெ 4, 6: 2. 11. டிெ. 4. 5. 3. அ-37