பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/597

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உவமையால் பெயர் பெற்றோர் 58? கண்ணையுடையவள், சேண் - தொலைவு; ஆர்இடையது. அடைதற்கரிய இடத்தில் உள்ளது; புனம் - நிலம்; விதுப்புவிரைவு நோகு - வருந்துவேன்) என்பது பாடல். ஓர் ஏரினை மட்டிலும் கொண்டுள்ளவன் ஈரம் வீண்படாமல் உழுதற்கு விரைதலைப்போல தன் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே (கார்காலத்தே) கண்டு அளவளாவ விரைகின்றதாகக் கூறுகின்றான். பல ஏருடையான் சிறிது சோம்பி யிருப்பினும் ஏவலாளர் துணைகொண்டு குறுகிய கால அளவில் உழுதுவிடல் கூடும்; ஒர் ஏர் உழவனோ அவ்வோரேரைக் கொண்டே ஈரம் வீண்படாமல் உழ வேண்டியவனாதலின் விரைந்து செயற்படுவான். ஆதலின் அவனை உவமை கூறினான் தலைவன். ஒரேர் உழவன் என்றது ஒரேரும் அதனால் உழப்பெறும் சிறு நிலமும் உடையவனைக் குறித்தது. தன் நெஞ்சு விரைந்தும், நெடுந்தொலைவு காரணமாகத் தான் உடனே சென்று காண்பதற் குரிய நிலையில் இன்மையின் நோகோ யானே' என்கின்றான். தலைவனின் விரைகின்ற உள்ளத் துடிப்பிற்கு ஒர் ஏர் உழவனின் உள்ளத் துடிப்பை உவமை காட்டி விரைகின்ற உள்ளத்தையும் உழவின் சிறப்பையும் ஒருங்கே விளக்கிய கவிஞர் பெருமான் ஒர்ே உழவனார் என்ற நிலையான சிறப்புப் பெயர் பெறு வாராயினர். - (iii) கயமனார் பரத்தையிற் பிரிந்த தலைவன் தோழியிடம் வாயில் வேண்டு கின்றான். தோழி, நின் பரத்தமையாகிய கொடுமையால் தலைவி துன்புறுவளாயினும், நீ செய்த குற்றத்திற்குத் தான் நாணி எமக்கும் அறிவியாமல் மறைத்துக் கற்பொழுக்கத்தில் சிறப்புற்றுள்ளாள்; ஆதலின் சினந்திலள் என்றுகூறித்தலைவியைக் கண்டு மகிழ்தல் இயலும் என்பதை அவனுக்குப் புலப்படுத்து கின்றாள். பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீன் இருங்கழி ஒதம் மல்குதொறும் கயம்மூழ்கும் மகளிர் கண்ணின் மானும்