உவமையால் பெயர் பெற்றோர் 583
காமம் தாங்குமதி என்போர் தாமஃ(து) அறியலர் கொல்லோ அனைமது கையர்கொல் யாமெங் காதலர் காணே மாயிற் செறிதுணி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுது ைபோல மெல்ல மெல்ல இல்லா குதுமே."
தாங்குமதி - பொறுத்து ஆற்றுவாயாக: மதுகையர் - வன்மையுடையவர்; துனி - துயர் பெரு நீர் - மிக்க வெள்ளம்) *
இதில் பிறரை நோக்கிக் கூறுவாள்போல் தலைவி கூறுகின்றாள்: 'காம நோயைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று சிலர் அறிவுரை கூறுகின்றனர். அவர் காமத்தின் தன்மையை அறியாத பேதையர். நல்லாண்மையையும் நாணையும் அழிக்க வல்ல ஆற்றலுடையது காமம்; கணவரைப் பிரிந்து தனித் துறையும் மகளிரைத் தெறுஉம் இயல்புடையது அது. அதனைப் பொறுக்கு ஆற்றல் எனக்கில்லை. காதலரைச் சிறிதுபோது காணாவிடினும் உள்ளம் உறுதுயர் கொண்டு விடுகின்றது; உள்ளத் துயருக்கேற்ப உடல் நலனும் சிறிதுசிறிதாகக் குன்றத் தொடங்குகின்றது. புதுப் புனலில் மிதந்து வரும் பருத்த நுரைத்திரள் ஆற்றின் கரைக்கண் அமைந்த கல்மீது மோதுந்தொறும் மோதுந்தொறும் அதன் அளவு சிறிது சிறிதாகக் குறைந்து இறுதியில் இருந்த இடமும் தெரியாமல் மறைவதைப் போல நானும் விரைவில் அழிந்தொழிவேன்' என் கின்றாள். கல்பொரு சிறு நுரை' என்ற அழகிய உவமை யமைத்த புலவரும் கல்பொரு சிறுதுமையார் என்ற சிறப்புப்பெயர் பெறுவாராயினர்.
(). கவை மகன்
தலைவி-தலைவனின் ஒப்புயர்வற்ற காதல் ஒழுக்கத்திற்கு உறுதுணையாக நித்கின்றாள் தலைவியின் உயிர்த் தோழி. தலை வியின் பருவம் அறிந்து அவளைக் காக்கும் பண்பாடுணர்ந்த தாய் தன் மகளை இற்செறிக்கின்றாள். தலைவன் அதனால் இரவுக்
4. டிெ. 290
பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/599
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
