பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/600

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


584 அகத்திணைக் கொள்கைகள் குறியை மேற் கொள்ளத் துணிகின்றான். இந்நிலையில் தோழி இரவுக்குறியை மறுப்பாள்போல் வரைவு கடாவுகின்றாள். இச் செய்தியை விளக்கும் தோழி கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடல்; கொடுங்கான் முதலைக் கோள்வல் ஏற்றை வழிவழக் கறுக்கும் கானலம் பெருந்துறை இனமீன் இருங்கழி நீந்தி நீநின் நயனுடை மையின் வருதி: இவள்தன் மடனுடை மையின் உயங்கும்; யான்அது கவைமகன் நஞ்சுண் டாஅங்கு அஞ்சுவல் பெரும!என் நெஞ்சத் தானே." (கொடுகால் - வளைந்த கால்; கோள்வல் - கொல்லுதல் வல்ல; ஏற்றை - ஆண்; வழிவழக்கு - வழியில் செல்லுதல்; அறுக்கும் நீக்கும்; இனமீன் - திரளாகிய மீன்; இரு கழி. கரிய கழி; நயன் - அன்பு: வருதி - வருகின்றாய்; மடன் - அறியாமை; உயங்கும் - வருந்துவாள்; கவை மகன் - இரட் டைக் குழவிகள்; அஞ்சுவன் - அஞ்சுவேன்) இதில் தோழி கூறுகின்றாள்: நீயோ ஆற்றின் அல்லல் கண்டும் நின் அன்புடைமையால் அஞ்சாது வரத் துணி கின்றனை; அத்தகைய அன்புடைய நின்னை வாரற்க என்று கூற என் மனம் அஞ்சுகின்றது. ஆனால் அவளோ நின் அன்பின் ஆழத்தையோ ஆற்றலின் பெருமையினையோ அறியாளாய் நீ கொடிய வழியில் இரவில் வருதலை எண்ணி எண்ணி வருந்துகின்றாள். அவள் வருத்தம் மிகுமாறு வருக என்று கூறவும் என் உள்ளம் அஞ்சு கின்றது; வாரற்க என்று கூறிய நின் உள்ளம் வருந்தும் என்றும் அஞ்சுகின்றேன். என்ன செய்வதென்று அறியாது விழிக்கின்றேன்: என்கின்றாள். தலைவன்-தலைவி இருவரின் உள்ளத் துடிப்பினையும் உணர்ந்துள்ளமையால் எதுவும் செய்ய மாட்டாது வருந்தும் தன் நிலைக்கு இரட்டைக் குழந்தைகளை உடையாள் ஒரு தாய் அவ்விரு குழந்தைகளும் ஒரே சமயம் நஞ்சுப் பொருளை உண்டக் கால் எந்தக் குழந்தைக்கு நஞ்சுதீர் மருந்தை முதலில் அளிப்பது என அறியாது துடிக்கும் தாயின் துயரினை உவமை காட்டித் தன் உள்ளத் துடிப்பைத் தோழி ஒருவாறு உணர்த்துகின்றாள்; தான் 5. டிெ 324