பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/606

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


590 அகத்திணைக் கொள்கைகள் ஒடிச்சென்று எவரையேனும்:அழைத்து வர இயலாத நிலை, ஊமன் நிலையைத் தலைவியின் துயர்நிலைக்கு ஒப்பிட்டு விளக்குகின்றார். கவிஞர். துயர் கூற இயலா நிலையிலுள்ள தலைவிக்குக் குராற் பசு கூவலில் விழக்க ண்ட ஊமனை உவமை கூறிய இச்சிறப்பினால் கூவல் மைந்தன் என்ற சிறப்புப் பெயர் பெற்றுத் திகழ்கின்றார் இப்பாடலை யாத்த ஆசிரியர். (x). செம் புலப் பெயணி சார் ஒருவனும் ஒருத்தியும் ஊழின் வலியால் ஒருவரையொருவர் ”ண்டனர். வட கடல் இட்ட நுகம் ஒருதுறை தென்கடல் இட்ட ஒரு கழி சென்று கோத்தாற்போல இயற்கைப் புணர்ச்சி புணர்ந் தனர். இருவரும் சிறிதுபோது உரையாடி மகிழ்ந்திருந்தனர். 'தலைவன் பிரிவானோ? என்ற அச்சம் தலைவிக்கு ஏற்பட்டது, தலைவியிடம் இக்குறிப்பு வேறுபாடு கண்ட தலைவன் ஆறுதல் மொழி பேசுகின்றான். இதனை விளக்குகின்றது இக்குறுந் தொகைப் பாடல். யாயும் ஞாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே." (யாய்-என் தாய்; ஞாய்-நின் தாய் தாய்-அவர் தாய்; எந்தை-என் தந்தை, நுந்தை-துன் தந்தை; தந்தை-அவர் தந்தை; கேளிர்-உறவினர்; செம்புலம்-செம்மண் நிலம்; பெயல் நீர்-பெய்த மழைநீர், தாம்-தாமாகவே, கலந்தன. ஒன்றுபட்டன) இருவரின் உறவு செம்மண்ணும் அதில் பெய்த மழைநீரும் சேர்ந்து உண்டான கலவைபோல் ஒன்று கலந்து விட்டன என்ற அழகிய உவமையால் விளக்குகின்றார் கவிஞர். இந்த உவமையில் நிலத்தோடு நீர் வந்து சேரவில்லை; நீரோடும் நிலம் வந்து சேர 11. ു.-40