பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/607

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உவமையால் பெயர் பெற்றோர் 591 வில்லை. நிலத்தின் இயல்பை நீர் பெற்றுவிட வில்லை; நீரின் இயல்பை நிலமும் அடைந்துவிட வில்லை. இரண்டுமே ஒன்று கலந்தன; இரண்டுமே தம் இயல்பு இழந்தன. இங்கே தனி நீரும் இல்லை; தனிப் புலமும் இல்லை. நீரின் ஓடும் தன்மையும் இல்லை; நிலத்தின் திண்மைப் பண்பும் இல்லை. நீரும் நிலமும் மறைய சேறு என்ற புதுப்பொருள் தோன்றிற்று. இங்கே நீரின் தன்மையும் உண்டு; நிலத்தின் தன்மையும் உண்டு. இரு பொருளும் அவற்றின் இரு இயல்புகளும் இரண்டறக் கலந்து காட்சி அளித்தன. இங்ஙனம் உண்மைக் காதலர்தம் உள்ளத் தன்மையை உள்ளவாறு உணர்த்த வல்ல பொருள் செறிந்த உவமையை அமைத்த புலவரை அக்கால அறிஞருலகம் அவ்வுவமையைக் கொண்டே செம்புலப் பெயணிார் எனப் பெயரிட்டுப் பெருமை கொண்டது. (x) தனிமகனார் தலைவன் தலைவியிடம் ஆற்றி இருக்க: ஆண்டு நில்லாது அண்மையில் மீள்வேன்' என்று உரைத்து சென்றனன். தலைவன் பால் கொண்ட காதலாலும், கற்பின்சிறப்புணர்ந்தகாரணத்தாலும் நாண்நிறை முதலிய பெண்மைக் குணங்களை இழந்து நிற்கின்றாள் தலைவி. நாண் அகத்தில்லா அவள் உடல் உயிற்ற பாவை போலாகி விட்டது. அவளுக்குத் தோன்றாத் துணையாக இருந்த உள்ளமும் அவள்பால் நில்லாது அவனிருக்கும் இடம் தேடிச் சென்று விட்டது; ஆனால் உயிர் மட்டிலும் எல்லாம் அழியவும் அழியாது கிடக்கும் அவள் பாழ் உடலைக் காத்துக் கிடக்கின்றது. இவ்வாறு தனித்துத் துயருற்று வாடும் தலைமகள் ஒருத்தியின் நிலைக்கு வாழ்வோரெல்லோரும் ஒடிப் போமாறு முழுதும் பாழுற்ற் ஓர் இடத்தைக் காத்து நிற்கும் தனிமகன் ஒருவனை உவமை கூறுகின்றார் நற்றிணைப் புலவர் ஒருவர். நெஞ்சம் அவர்வயின் சென்றனெ, ஈண்டு ஒழிந்து உண்டல் அளித்து என்உடம்பே; விறல்போர் வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்ப் பாழ்காத் திருந்த தனிமகன்' போன்றே.' 12, நற் - 153