பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/608

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


592 அகத்திணைக் கொள்கைகள் (அவர் வயின் - அவர் பக்கம்: ஒழிந்து - நீங்கி; அளித்து . காக்கப்படும் தன்மையது; விறல் போர் - வலிய போர்: கையலை - படை அலைத்தலால்; போகிய-அகன்று விட்ட, பாழ் பேரூர் - பாழ் நகரம்) - பகைவரின் படை அலைத்தலால் ஊர் முழுதும் பாழ்பட்டது; அங்கு வாழ்ந்திருந்த மக்கள் யாவரும் வேற்றிடத்திற்கு ஒடிச் சென்றனர். அந்தப் பாழுற்ற இடத்தைத் தனிமகன் ஒருவன் காத்து நிற் கின்றான். தனிமகன் இத்தலைவியின் உயிருக்கு உவமை, பாழிடத்தைத் தனிமகன் காத்து நிற்பதுபோல் தலைவியின் பாழ் உடலை உயிர் காத்து நிற்கின்றது. இத்தகைய அரிய உவமை யால் புலவர் தனிமகனார் என்ற சிறப்புப் பெயர் பெற்றுத் திகழ் கின்றார். (xi). தேய்புரி பழங்கயிற்றினார் அண்மையில் திருமணம் முடித்துக் கொண்ட இளைஞன் ஒருவன் பொருள்வயிற் பிரிகின்றான். அறவோர்க் கெதிர்தலும், அந்தணர் ஒம்பலும், துறவோர்க் கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இல்லறத்தார்க்கு இயல்புடைய பண்பாம் என்பதை நன்கு அறிந்தவன் அவன். ஆகவே பொருள் வயிற் பிரிந்து செல்லுகின்றான். பிரிகின்றபோது அவள் வருந்தியே வழியனுப்பினாள். அவள் அன்பிற்கும் அழகிற்கும் மேலாக அவள் கொண்ட துயர்நிலை அவன் உள்ளத்தை மிகவும் வருத்து வதாயிற்று. - கானகத்தில் நடந்து சென்றபோது அவன் காதல் உணர்வும் கடமை உணர்வும் போரிடத் தொடங்குகின்றன. காதல் உணர்வு பேசுகின்றது: மேகம் போன்ற கூந்தல் அழகுதான் என்ன; மையுண்டு மருண்டு நோக்கும் கண்களின் எ ழி ல் தா ன் என்ன! கண்விழிக் கேற்ற இமைகள்; காதல் போதையை உண்டாக்குவதற்கு ஏற்ற வண்ணம் சிறிது திறந்திருக்கின்றன; மலரும் முகைபோல் கொஞ்சம் திறந்துள்ளன. என்னே அவற்றின் பொலிவு!’ என்று எண்ணுகின்றது. உள்ளத்தைப் பிணித்தவனிடத் துத் திரும்பி விடுவோம்’ ’ என்று கூறுகின்றது. கடமை உணர்வு இதனைமறுத்துப்பேசுவதுபோல்,"தொடங்கியவினையைஇடையே