பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையால் பெயர் பெற்றோர் 595 (xii), விட்ட குதிசை யார் தலைவியின் அன்பைப் பெற்ற தலைமகன் ஒருவன் களவொழுக்க நெறியிலேயே மேலும் சில நாட்களைக் கழிக்க எண் னினான். இது அரிய செயல் என்பதை அவன் அறியினும், அவன் உள்ளம் களவொழுக்க இன்பத்தையே நாடுவதாயிற்று. தலைவியின் ஆருயிர்த் தோழியை நாடித் தன் விருப்பத்தைப் புலப்படுத்தினான். அவளும் குறியமைப்பதாக ஒப்புக் கொண்டாள். ஒப்புக் கொண்டவள் தலைமகளைக் கண்டாள்; தலைமகள் தலைவனைக் காணமாட்டாமையால் கொண்ட துயரும் சினமும் உடையளாய்க் காணப்பெற்றாள். மக்களின் உள்ளப் பண்பைத் தெள்ளிதின் உணர்ந்தவளாதலின், தோழி தலைவனைப் பழிப்பதுபோல் 'தலைமகன் அறிவற்றவன்; அவனை எண்ணி வருந்தும் நம் வருத்தத்தினைச் சிறிதும் அறியாதுளனே' என்று கூறுகின்றாள். இது தலைவியைச் சிறிது நெகிழச் செய்கின்றது. இதனைக் குறிப் பாலறிந்ததும், 'நாம் வருந்துகின்றோம் இவ்வாறு; அவனாவது வருத்தமின்றி வாழ்கின்றானா? அவனும் நம்மைப் போலவே நலனை நாடி அதனையே எண்ணி வருந்துகின்றான். அவனைக் கண்டு வந்தோர் வெம்மையால் வாடி வருந்தும் நம் ஆனேறு போல், அவனும் மெலிந்து வாடுவதாகக் கூறினர். என்னே அவன் அறியாமை!’ என்கின்றாள். இதனைக் காட்டும் குறுந்தொகைப் பாடல்: விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன் யாம்தற் படர்ந்தமை அறியான் தானும் வேனில் ஆணேறு போலச் - சாயினன் என்பநம் மாணலம் நயந்தே." (விசைப்பு - துள்ளி எழும் எழுச்சி, விசும்பு - வானம்; பசுங் கழை - பசிய மூங்கில்; தன் படர்ந்தமை - தன்னை நினைந்து மெலிதலை; வேனில் - வெய்யில் காலம்; சாயினள் - மெலிந்தனள், ஆனேறு - இடபம்; மாண்நலம் - மாட்சிமைப்பட்ட நலம்.) இதில் வேனிலின் ೧೧.ಹಿಣLouTEು துன்புற்ற ஆணேறு, காம நோ யால் துன்புற்ற தலைவனுக்கு உவமையாக வந்துள்ளது. 15. டிெ. 74.