பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/612

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


596 அகத்திணைக் கொள்கைகள் 'வளைக்குங்கால் வளைந்த தேனும், இயல்பில் விசும்பு தோயும் உயர்வை யுடைய மூங்கிலைப் போல, தலைவன் நம் மாணலம் நயந்து நம்மைப் பணிந்து ஒழுகினானெனினும், இயல்பாகத் தலைமையை உடையன்' என்பது குறிப்பு. மேலும், மூங்கில் விசைத்தெழுதலுக்கு குதிரையின் விசைப்பை உவமை கூறியுள் ளார் கவிஞர். இந்த உவமைச் சிறப்பினால் இச் செய்யுளை இயற்றிய சான்றோர் விட்ட குதிாையார் என்ற சிறப்புப் பெயர் பெறலாயினர். (xiv). வில்லக விரலினார் பரத்தையிற் பிரிந்தான் தலைவன் ஒருவன். தலைவி இதனை அறிந்தாள். தான் தலைவனைப் புறம்போகாவாறு பிணித்துக் கொண்டதாகத் தலைவி தன்னைக் குறை கூறியதாக அறிந்தாள் பரத்தை. தலைவியின் செயல் கண்டு தலைவியின் பாங்காயினார் கேட்ப வருந்திக் கூறுவாள்; தலைவனை ஆசை காட்டி ஆட் கொண்டேன் என்ற பேச்சு வருகின்றது. நான் அத்தகை யாளல்லள்; தலைவர்மாட்டு எனக்கு அன்பு உண்டு என்பது உண்மையே. ஆயின் அதற்காகத் தலைமகள் வருந்த அவரை வலிந்து பெறவோ அவர் என் இல்லத்திலேயே இருக்கவோ விரும்புவேனல்லேன்: ஈண்டு அவரே வந்தார்; வந்தாரை மகிழ்ந்து வரவேற்று வாழ்வதில் தவறு இல்லை என்பது என் கருத்து. பிரிந்து செல்ல அவர் விரும்புவாராயின், அவர் செல்லத் தடை யாக இரேன்; இப்படி நானிருக்கத் தலைவி என்னைப் பழிப்பது ஏனோ?” என்கின்றாள். இந்நிகழ்ச்சியைச் சித்திரித்துக் காட்டும் குறுந்தொகைச் சொல்லோவியம்: பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை வண்டுவாய் திறக்கும் தன்துறை யூரனொடு இருப்பின் இருமருங் கினமே: கிடப்பின் வில்லக விரலிற் பொருந்தி;அவன் நல்லகம் சேரின் ஒருமருங் கினமே." 16. டிெ, 370