பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையால் பெயர் பெற்றோர் 597 (பொய்கை - மானிடர் ஆக்காத நீர் நிலை; அணி நிறம் - அழகிய நிறம்; முகை - மலரும் பருவத்ததாகிய அரும்பு; மருங்கு - உடல்; கிடப்பின் துயின்றால்; வில் அகம் விரலின் - வில்லை அகப்படப் பிடித்த விரல்கள்; 'தலைவனோடு இருக்குங்கால் ஈருடம்பினேமாகியும், துயிலும்போது ஒருடல்போல் ஒன்றியும், பிரிந்து செல்லுங்கால் எம் முடலாகிய ஒருடலினேமாகியும் இருப்பேம்' என்கின்றாள். ஆம்பல்போது மலரும் செவ்வியறிந்து வண்டு வாய்திறக்கும்; இது, தலைவன் எம்மொடு இருக்குங்கால் அவன் எம் உள்ளத்திற்கேற்ப ஒழுகுவான் என்ற குறிப்பினது. - வில்லைப் பிடித்த விரல்கள் ஒன்றோடொன்று மிகக் செறிந் திருக்கும்; அதனைக் கூறியது கவவுக்கை நெகிழாமல் அணைந்து நிற்றலை உணர்த்துவதற்காக செறிவுக்கு வில்லக விரலைக் கூறின மையின் இச்செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் வில்லக விாலினார் என்ற சிறப்புப் பெயர் பெறுவாராயினர்.