பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/616

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


600 அகத்திணைக் கொள்கைகள் எவன்கொல் வாழி தோழி கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே' (எல்லை-பகல் கழிய-நீங்க கதிர் சினம்-சூரியனதுவெப்பம்; தணிந்த-குறைந்த கையறு-செயலறுதற்குரிய வரம்புஎல்லை; நீந்தினம்ஆயின்-கடந்தோமாயின்; கங்குல்-இரவு; வெள்ளம்-மிகுதி) மாலையைக் கடலாகவும், அதனைத் தொடரும் இரவினை அதன் வரம்பாகவும் வைத்துக் கூறினாள் தலைவி. ஒரு சிறு பொழுதை அடுத்து வரும் மற்றொரு சிறு பொழுதைக் கரையாகக் கூறும் இப்பாடலை நினைந்து பரிமேலழகர் கூடிய ஞான்று பிரிவ ரென்று அஞ்சப் பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல்:வெள்ளத்திற்குக் கசையாய் வாரா நின்றது (குறள் 1225) என்று உரை எழுதினர். தமிழில் மிகப்பெரும் எண்களைக் குறிக்கும் எண்ணுப் பெயர் களுள் தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன சிறப்புடையன. அளவிடற்கரியது என்ற காரணத்தினாலேயே மழை பெய்யுங்கால் பெருகிவரும் பெருநீரை வெள்ளம் என்று வழங்கினர். இச் செய்யுளில் கணவனைவிட்டுத் தனித்து வாழும் மகளிர்க்கு மிக நீண்டு தோன்றும் இரவினைக் குறிப்பிடக் கங்குல் வெள்ளம் என்ற தொடர் மேற்கொள்ளப்பெற்ற பெருமையினால் இதனை அமைத்து இயற்றிய கவிஞரின் இயற்பெயர் எப்படியோ மறைந்து, கங்குல் வெள்ளத்தார் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றுத் திகழ் கின்றார். (iii). குறியிறை யார் யாதோ ஒரு காரணம்பற்றித் தன்னை விட்டுப் பிரிந்த தலைவனையே நினைந்து வருந்துகின்றாள் தலைவி யொருத்தி. தலைவனைத் தோழி பழித்து தலைவியைத் தேற்றுகின்றாள். பழித்தலை அகப்பொருள் நூலார் இயற்பழித்தல்' என்று கூறுவர். இந்நிகழ்ச்சியைச் காட்டும் குறுந்தொகைச் சொல் லோவியம்: ہے بے چم سمجتیبچہ نمیب مسلم 4. டிெ.387