பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/626

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


610 அகத்திணைக் கொள்கைகள் இன்னதொன்றாம், தோழி கேட்பின் இன்னதொன்றாம், யாரும் கேட்பாரில்லையாயின் இன்னதொன்றாம் என்று பயன் சிந்தித்துச் செல்லுமோ எனிற், சொல்லாள்; குழவி அழுதாற் போல வேட்கை மிகுதியாற்சொன்னவிடத்து அப்பயன் நிகழும். குழவி அழுகின்றது, 'எனக்குப் பால் தம்மின், நீர்ஆட்டுமின் என்றழாது, துக்கம் வந்த தாக அழும்; அழ, அறிவார் பயம் எய்துவிப்பர் என்பது (இறை. 30ன் உரை). எ-டு: குறள், 1210; குறுந் 107; திருக்கோவை. 174. காமனைப் பழித்தல் : பிரிந்து வாழ்பவரிடம் காமன் தன் கைவரிசையைக் காட்டுகின்றான். அவன் தன் தீங்கரும்பு வில்லை வளைத்து, வண்டுகளை வரிசையாகக் கோத்த நாணைப் பூட்டி, தேன்பிலிற்றும் மலர்க்கணைகளைத் தெரிந்து, இடம் பார்த்து எய்கின்றான். அந்த மலரம்பு வச்சிரக் கணையைவிடப் பொல் லாததல்லவா? தனிமை வாழ்க்கையில் அக்கொடிய அம்பினால் தாக்கப்பட்டவர் அவனை இகழ்ந்து பேசுகின்றனர். இதுவே காமனைப் பழித்தல் துறையாகும். காந்தி கலித்துறை அந்தாதி யில் ஒரு பாடல்: எரிந்தனை அந்நாள் எனச்சொலு வார்.அதை யான்அறியேன்: விரிந்தமெய்ச் சீர்த்திகொள் மேதினிக் கேதனி மேன்மைதரும் அருந்தவக் காந்தி அமர்குறித் தேபிரிவு ஆற்றும்.எனை வருந்திடில் மாளுவை வள்ளலின் ஆணை: மெய்! மன்மதனே. [சீர்த்தி - புகழ்: மேதினி - பூமி) 'மன்மதா, ஒரு காலத்தில் நீ வெந்தொழிந்தாய் என்பர்; அஃது எனக்குத் தெரியாது. உண்மையான புகழைக் கொண்ட காந்தி யடிகளின் உரைவழி நின்று பிரிவு பொறுத்து வாழும் என்னையும் வருத்துவது என்று நீ கருதினால் உனக்கு அழிவு காலம் வந்து விட்டது. இஃது உண்மை; அந்த வள்ளலின்மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன்; வீணாக அழியாதே'- என்று தலைவி அல்லது தலைவனின் கூற்றாக அமைகின்றது இப்பாடல். குறையற உணர்தல் : பக் (82-84). செலவழுங்கல் : செல்லுதலைத் தவிர்ந்தது என்பது இதன் பொருள். செலவிடை அழுங்கல் செல்லாமையன்றே: (கற்பு - 44)