பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/627

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பின்னிணைப்பு-2 611 என்பது தொல்காப்பியம். இளங்காதலர்கட்குப் பிரிதல் என்பது முகவாட்டமும் உயிர்வாட்டமும் தரும் கொடுஞ் செயலாகும். பருவத்தாரின் இம் மனநிலை பருவம் வாராதர்க்குத் தோன்றாது: பருவங் கடந்தார்க்கோ மறந்து போகும். உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே' (குறுந் 18) என்றவாறு தலைவி ஆழ்ந்தகன் றடங்கிய காமச்செறிவு உடையவள். நம் பிரிவு அறியா நலனொடு சிறந்த நற்றோள் (அகம் - 41) என்னுமாறு பிரிவென்ற ஒரு நிலை யுண்டு என்பதையே அறியாதவள். இம் மடமகளின் ஒப்புத லின்றிப் பிரிந்து செல்லல் இயலாத, கூடாத செயல். பிரிவிற்கு முந்திய சில நாள் இரவுப் புணர்ச்சிகளில் கணவன் மிகையாகச் செய்யும் காதலாரவாரம் பிரிவுக் குறிப்பு உண்டு என்பதாக அறிவுடை நங்கையொருத்தி ஐயப்பட்டு அழுகின்றாள்: இன்ன வருத்தத்தைக் கண்ட தலைவன் செலவினைத் தவிர்க்கின்றான் எ-டு: அகம்-5; பட்டினப்பாலை அடி (218.220); (300-30); குறுந்' 135, 256, 267) - - - - சேட்படை : சேண்+படை, சேண் - அகற்சி; படை - நிகழ் தல். எனவே, காப்பு மிகுதி சொல்லித் தலைவனை அகலுமாறு செய்தல். சேட்படுத்துதலாவது அகற்றுதல்; தூர விடல். இங்குச் சேட்படுத்துதல் என்பது அணுக்கமாய் நினைத்த அவளது நெஞ்ச நினைப்பையே என்றுகொள்க. இஃதுஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் தோழி நீக்கலினாய நிலைமை நோக்கி (கள-11) என்ற துறைச் சொற்றொடரின்கண் அடங்கும். பக். (104-115) தசுை அணங்குறுத்தல் தகை - அழகு, அணங்கு உறுத்தல். வருத்தமுறச் செய்தல். அணங்குறுத்தல் என்பது அணங்குறச் செய்ததைச் சொல்லுவதைக் குறிப்பிட்டதாயிற்று. களவியலில் வரும் துறை. எ-டு: குறள் - 1081 (l09-ம் இயல் முழுவதும் கொள்க). - தாய் இாங்கல் : தாயார் வருந்துதல் என்பது இதன் பொருள். மகள் செயல் கண்டு தாயார் வருந்துவதாகக் கூறப் பெறுவது தாய் இரங்கல் என்னும் துறை. இதனை நற்றாய் இரங்கல் என்றும் நவில்வர். அசதிக் கோவையில் நற்றாய் இரங்கல் துறையில் ஒரு பாடல்: அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி, அணிவரைமேல் முற்றா முகில்முலை, எவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல்