பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 - அகத்திணைக் கொள்கைகள் கற்றார்ப் பிரிவும்கல் லாதார் இணக்கமும் கைப்பொருள் ஒன்று அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே. 'ஏதும் இல்லாதாரைக் காப்பாற்றுகின்ற அசதி என்ற வள்ளலின் மலையினிடத்தே, என் மகள் எப்படி நடந்தாளோ? முத்தமிழ் வல்ல வித்தகரைப் பிரிந்தால் உள்ளம் கொதிப்பது போலவும், கல்லாதாரோடு சேர்ந்து வாழும்போது சுடுவது போலவும், கையில் பணம் இல்லாதவனுடைய இளமைப் பருவம் ஒன்றையும் அநுபவிக்க வெட்டாமல் அனலாகக் கொளுத்துவது போலவும் என் சிறு பெண்-முற்றா முகிழ் முலை-சென்ற பாலைநிலம் நெருப்பைக் கக்குமே; அதைக் கடந்து எவ்வாறு சென்றனளோ?’ என்று தாய் இரங்குகின்றாள். திங்களைப் பழித்தல்: பிரிந்தோரைச் சுடும் சந்திரனைப் பழித்துப் பேசுதல் திங்களைப் பழித்தலாகும். திங்கள் இயற் கையில் தண்ணளியுடையது. அது புணர்ந்தோர்க்கு இன்பமும், பிரிந்தோர்க்குத் துன்பமும் தருகின்றது. காந்தி கலித்துறை அந்தாதியில் ஒரு பாடல்: இழிவு பிறன்மனை எய்தல் எனும்அறிவு இன்றி, உறு பழியும் உணர்கிலை; பண்டு குருபெரும் பன்னியை,நீ அழிதல் வினைசெய்தை என்பர்: அதுகொடு மோகனனின்! வழுவில் தவமுடை என்னை மதியே! சுடவலையே? 'பிறன்மனை நோக்குதல் இழிவு என்ற அறிவே இல்லாமல், வரக் கூடிய பழியையும் பாராமல், அந்நாள் குருபெரும் மனைவியை அழிகாரியம் செய்தாய் நீ என்பர்; அந்த வீரத்தை மனத்தில் கொண்டு குற்றமற்ற தவமுடைய மோகன தாசனின் அடியே னாகிய என்னைச் சுடப் பார்க்கின்றாய்; மதியே! இஃது உன்னால் நடவாத காரியம்’ என்று பேசுகின்றான் காந்திவழி நின்ற மெய் யடியான். தூது போக்கல்: தூதாக அனுப்புதல் என்பது இதன் பொருள். காதலிக்குக் காதலன், அல்லது காதலனுக்குக் காதலி