பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 அகத்திணைக் கொள்கைகள் எண்ணிஉ ளேன்; நான் வரும்வரை நீநம் இனித்ததமிழ் நண்ணும் இலக்கியத் தேன்குடித்து ஆறுக நாயகியே. பெரிய காந்தியின் அமர்க்களம் குறுக நான் எண்ணும்போது நீ வருந்தவே கூடாது; நான் திரும்பும் வரை நீ நம்முடைய தித்திக்கும் இலக்கியத் தமிழ்த் தேனைப் பருகி ஆறுதல் பெறுக' என்று இயம்புகின்றான் தலைவன். -- ஒரு தலைவன் பிரிந்து போவேன் என்று அடிக்கடிச்சொல்லியும் பிரியாதிருந்தான்.பின்னொருநாள்போவேன்என்று உரைத்தபோது, வழக்கம்போல் சும்மாசொல்லுகின்றான் என்று எண்ணிய தலைவி போய் வாருங்கள் என்று தானும் வழக்கம்போல் மொழிந்தனள். இத்தடவை அவள் இசைவுதந்தாள் எனக் கருதிக் கொண்டு தலைவன் உடனே புறப்படுவிட்டான். எதிர்பாரா இப்பிரிவினை அவளால் தாங்க முடியவில்லை, அழுதாள்; ஆறாகக் கண்ணிர் பொழிந்தாள்; அது குளமாகப் பெருக்கெடுத்தது. முலைகள் கரைகளாக அமைந்த கண்ணிர்க் குளம் நாரைகள் மேயும் நன்னில மாயிற்று. எ-டு: குறுந்-325, - பொழுது கண்டு மயங்கல்: மாலைப் பொழுது வருத்துவ தால் பிரிந்தவர் மயங்கி வருந்துதல்பற்றிக் கூறுவது இத்துறை. பிரிந்த காதலரை வாட்டுவது மாலைக் காலமே யல்லவா? காதல் நோய் காலையிலே அரும்பும், பகல் முழுதும் மொட்டாக இருக்கும்; மாலையிலே நன்றாக மலரும், சிவப்பிரகாசரின் ஒரு பாடல்: நந்தா மதுகைப் பழமலை யார்வெங்கை நாடனையாய்! வந்தாவி அம்புயம் வாட்டும்முன் நாளில்அம் மாலை தந்து சிந்தா குலமுற வேதணித் தாரைச் செறுக்கும்;மதன் செந்தா மரையை மலர்த்தும்;இம் மாலைச் சிறு பொழுதே. |மதுகை - பலம்; பழ மலை விருத்தாசலம்; அம்புயம் - தாமரை: ஆகுலம் - துன்பம்; மதன் மன்மதன்,