பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/633

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பின்னிணைப்பு-2 647 இந்த மாலைச் சிறு காலம் தடாகத்திலுள்ள தாமரையை வாட்டமடையச் செய்யும்; முன் காலத்தில் இக் காம மயக்கத் தைத் தந்து இன்று தனிமையாக விட்டுச் செல்லப் பட்டாரைத் தாக்கும்; மதனவேளின் செந்தாமரை முகத்தை மலரச் செய்யும் இம் மூன்றையும் செய்யும் மாலையின் எல்லை சிறிதே எனினும் அஃது ஆற்றும் செயல் பெரிதாகவே இருக்கின்றது” என்கின்றாள் பொழுது கண்டு மயங்கும் தலைவி யொருத்தி. மடல் ஊர்தல்: தலைவியின் நற்குறிப்பு அறிந்தபின் காதலர்கள் பகலும் இரவும் காணவும் கூடவும் தோழி வழி செய் வாள். தலைவியின் அருமையைத் தலைவன் உணரவும், தலைவனின் உறுதியைத் தான் உணரவும் இக் கூட்டத்திற்கு அதிகமாக இடம் கொடாள். வேண்டுமென்றே கூட்டம் நிகழாத வாறு நாள் கடத்துவாள். இந்நிலையில் அவன் மடலேறத் துணிந்து தன் கருத்தைத் தோழிக்கு வெளியிடுவான். மடல்மவி என்பது பனங்கருக்கால் செய்யப்பெற்ற ஒரு குதிரை. இக் குதிரைக்கு ஆவிரம்பூ மாலையும் மணியும் அணிதல் உண்டு. காமுற்ற பெண்ணை எய்தப்பெறாத ஆடவன் மார்பில் எலும்பு மாலையும் தலையில் எருக்கம் பூ மாலையும் கொண்டு மடல்மாமேல் ஏறித் தெருவில் வருவான். இவ்வழக்கு மடலூர்தல்', மடலேறுதல்’ எனப்படும். இதனால் ஊரார் இருவர் காதல் ஒழுக்கத்தை அறிவர். காதலன்பால் இரக்கம் கொள்வர்; பெண்ணின் பெற்றோரைக் குறை கூறுவர். பெரும்பாலும் மடலேற்றம் நிகழாதபடி மணங்கள் முடிந்துவிடும். எ-டு: குறுந் 17, 182. மடல் கூற்று சேட்படுக்கப்பெற்று ஆற்றாணாய தலை மகன் இனி வேறு வழி இல்லாமையால் மடல் ஏறியாவது தலை மகளை அடைதல் வேண்டும் என்று கூறுவதுதான் மடற் கூற்று என்பது. எ-டு. திருக்கோவை - 74; குறள், 1131. மடல்திறம்: பக் (115-123), மடலேறுதல்: அகத்திணை இலக்கியத்தில் மடல்’ அல்லது * மடல்மா” பனங் கருக்கால் செய்யப்பெற்ற குதிரையைக் குறிக்கும். இக்குதிரைக்கு ஆவிரம்பூ மாலையும் மணியும் அணிதல் உண்டு (குறுந்- 173). தான் காமுற்ற பெண்ணை எய்தப் பெறாத ஆடவன் உடலெலாம் நீறு பூசி ம்ார்பில் எலும்பு மாலை யையும் தலையில் எருக்கம் பூமாலையையும் கொண்டுதன் உருவத் தையும் தலைவியின் உருவத்தையும் எழுதிய படம் ஒன்றைக்