பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 619. விளித்துக் கூறுதல். முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும் உரியது (தொல், பொருள் - கற். 25). தோழி நிலவை நோக்கிக் கூறியது, குறுந். (47); தலைவி கூறியது குறுந் 152, 290; தோழி கூற்று கலி - 22. முன்னுற உணர்தல்: பக். (84-86). வண்டோச்சி மருங்கணைதல்: வண்டை ஒட்டிக் கொண்டே பக்கத்தில் நெருங்குல் என்பது இதன் பொருள். தன்னால் காதலிக்கப்பெற்றவள் ஒரு தனியிடத்தே நிற்கின்றாள். அவள் குறிப்பை அறிய அவளுக்கு அணித்தே அணுக விரும்புகின்றான் காதலன். திடீரென எப்படி அவள் சூழல் அணைவது? அம் மெல்லியல் முடித்த கூந்தலில் நறுமலர் நிறைய சூடியிருக் கின்றாள்; அம்மலரிடத்தே மதுவுண்ண வண்டுகள் மொய்த்திருக் கின்றன. ஒ! வண்டுகாள்! அம்மென் கொடியை ஏன் வதைக் கின்றீர்கள்? ஒடுங்கள்!' என்று கூறி வண்டுகளை விரட்டிக் கொண்டே கையை உயர்த்திய வண்ணம் அவள் பக்கம் அணைந்து விடுகின்றான் தலைவன். இதற்குப் பாக்கள் வண்டை ஒட்டும் துறையில் பாடப்படுகின்றன. காந்தி கலித்துறை அந்தாதியில் ஒரு பாடல்: நாகு செழித்திட நண்ணும் - முரட்டுக் கதர்சுமந்து வாடிய சிற்றிடை நொந்தரும் எண்கண் மணிவருந்தக் கூடி அவர்நறுங் கூந்தல் மலர்மொய்த்துக் கொல்லுகின்றீர்! கேடு வரும்இனி ஒடுமின் வண்டீர்! கிளிமொழிக்கே. (வாடிய - வாட்டமடைந்த கண்மணி - தலைவி; கிளி மொழி - தலைவி.1 வண்டுகளை ஒட்டுவதுபோல் கிள்ளைப் பேச்சினளின் மருங்கே பொருந்துகின்றான் காதலன். வளைவுகடாதல்: பக் (142-155). வரைவு மலிதல்: திருமணம் செய்து கொள்ளுதற்கு மேற் கொள்ளும் முயற்சி, தோழி தலைவியை நோக்கி, நின் மன்றலுக்