பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/637

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பின்னிணைப்பு-2 621 தில் தலைவியின் குறிப்பறிந்து வாயில் மறுப்பாள். பரத்தையிற் பிரிந்து மீண்டுவரும் தலைவனுக்குத் தலைவியும் வாயில் மறுப்ப துண்டு. வாயில் மறுத்தல் பாடல்கள் வாயில் நேர்தல் பாடல்களை விட அதிகமாகக் காணப்பெறும் எ-டு: குறுந், 61, 139, 202, ஐங். 51, 54:47, நற். 360. திருநறையூர்பற்றிய பெரியதிருமொழிப் பாசுரம் ஒன்றிற்கு விளக்கம் தரும் முறையில் பராசரபட்டரின் நிர்வாகத்தை பெரிய வாச்சான் பிள்ளை மிகஅழகாக எடுத்துக்காட்டும்போது இத்துறை அருமையாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். பள்ளி கமலத்திடைப்பட்ட பகுவாய் அலவன் முகம்நோக்கி நள்ளி ஊடும் வயல் (6.7:6) தாமரைப் பூவில் பாயல்கொண்டிருந்த ஆண் நண்டின் முகத்தைப் பார்த்துப் பெண் நண்டு பிணங்கும் என்பது பாசுரப்பகுதியில் குறிப்பிட்டுள்ள பொருள். பட்டரின் விளக்கம்: ஒர் ஆம்பல் மலரில் நண்டு தம்பதிகள் இனிது வாழ்கின்றன. ஒரு நாள் ஆண் நண்டுக்குக் (அலவன்) கருக்கொண்டுள்ள தன் பேடைக்கு (நள்ளி) இனிய பொருள்களைக் கொண்டுவந்து தரவேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. தாமரைப் பூவிலிருந்து மகரந்தத்தைத் திரட்டிக் கொணர்ந்து கொடுக்க நினைந்து மெல்ல நகர்ந்து தாமரைப் பூவை அடைந்தது; அப்போது பகலவன் மறையவே, அத்தாமரை மலர் மூடிக்கொள்ள அதனுள்ளே அகப்பட்டுக் கொண்டது. தாமரையை மலர்த்தி எப்படியாவது வெளிக் கிளம்ப முயன்றும் இயலவில்லை. அடுத்த நாள் சூரியன் தோன்றும் வரையில் காத்திருக்கவேண்டியதாயிற்று. இரவெல்லாம் மலரினுள் புரண்டு பொழுது விடிந்ததும் வெளிப் போந்தது. தாதும் சுண்ணமும் உடலில் ஒட்டிய நிலையில் தன் மனைக்கு விரைந்து வந்து சேர்ந் தது. பகற்பொழுதில் ஆம்பல் மலர் மூடிக்கொள்ளுமாதலால் ஆண் நண்டு அங்கு வந்து சேரும் சமயமும் பெண் நண்டு கிடக்கும் ஆம்பல் மலர் முடிக்கொள்ளும் சமயமும் ஒன்றாக இருந்தது. இதனைப் பார்த்தால், ஆண் இரவில் வேறிடத்தில் தங்கி வந்த படியாலும், உடம்பில் சுவடு இருந்தபடியாலும், ஊடல்கொண்டு கதவை அடைத்துக் கொண்டது என்று எண்ணும்படியாக இருந்தது. வாயில் மறுத்தல் என்ற துறை இதில் அடங்கியிருத் தலைக் கண்டு மகிழலாம். .