பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 அகத்திணைக் கொள்கைகள் உலகியல் கூறிப்பொருள் இது என்ற* திருவள்ளுவரின் காமத் துப்பாலும் தமிழர் மணமுறைப்படி அமைந்துள்ளதை ஊன்றி நோக்குவார்க்குப் புலனாகும்." இவற்றையெல்லாம் நச்சினார்க் கினியரும் யாழோர் கூட்டத்திற்கும் தமிழர் கூட்டத்திற்கும் உள்ள வேற்றுமையை கந்திருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது’’’ என விளக்கி புள்ளார். இறையனார்களவியலுரையாசிரியர்களவு என்னும்பெயர்க்குக் கூறியுள்ள காரணத்தையும் ஈண்டு அறிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. அவர் கருத்துப்படி மக்கள் தலையாய மக்கள், இடையாய மக்கள், கடையாய மக்கள் என்று மூவகைப்படுவர். எல்லாச் சமயத்தாரும் பெண் இன்பம் திது என்றே கூறியுள்ளனர். அந்த இன்பம் உண்டாயின் சுற்றத் தொடர்ச்சி உண்டாகும்; அத் தொடர்ச்சியால் கொலை, வெகுளி, செருக்குப் போன்ற குற்றங் கள் நிகழ்தல் கூடும். இவற்றை எண்ணிப் பார்த்தே தலையாய மக்கள் பெண் இன்பத்தினின்றும். நீங்குவர். இடையாய மக்கள், பெண்களைப்பற்றி நூல்கள் மூலம் அறிவர். பெண் என்பது ஒர் எலும்புச் சட்டகம்; நாற்றமுள்ள கூடு, புழுப்பிண்டம். அது பிளை, மலம், குடல், கொழுப்பு முத்திரம் முதலியவற்றின் சார்புடையதேயன்றி ஒரு சிறந்த பொருளன்று; அது சிறந்த பொருளாயின் பூ, சாந்து, எண்ணெய் முதவிய அணிகலன்களை அதற்குப் புனைய வேண்டியதில்லை. இவ்வாறு அவர்கள் உடம்பின் அசுபத் தன்மையை எண்ணிப் பெண்ணின்பத்தினின்று, அகன்று போவர். கடையாயினார், எத்திறத்தானும் அவ்வின் பத்தை விட்டு நீங்கார். காரணம், அனாதி காலத் தொட்டுப் பல பிறப்பிடை ஆணும் பெண்ணுமாகப் பழகிப் போகந் துய்த்து வருவதேயாகும். இவர்களையும் பேரின்பத்துக்குச் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, இவர்கள் ஆணும் பெண்ணுமாக இவன் பதினாறாட்டைப் பிராயத்தனாய், இ வ ளு ம் பன்னிராட்டைப் பிராயத்தளாய் ஒத்த பண்பும், ஒத்த 2 கல்லாடம்-14 வரி(20-23) 2. 'காழத்துப் பாலைப் பெரும் பாலும் வடநூல் வழக்குப் பற்றியும், சிறுபான்மை தமிழர் வழக்குப் பற்றியும் வள்ளுவர் கூறினார் என்ற பரிமேலழகரின் கருத்து ஏற்கத் திககதனறு, - - 23. களவியல். (தச்.உரை) 2