பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அகத்திணைக் கொள்கைகள் வதற்குத் துணை புரிபவை. காமஞ் சொல்லா நாட்டம் இவ்வுலகில் இல்லையாதலாலும், பெண்மைக்கே இயல்பாகவுள்ள நாணமும் மடமும் நிலைபெற்ற தலைவியிடம் காமத் திணை: குறிப்பினாலும் இடத்தினாலும் அல்லது வேட்கை புலப்பட நிகழாது ஆதலானும் கண்களையே துணையாகக் கொள்ளல் வேண்டும். கண்டவுடன் வேட்கை தோன்றி ஒருவரது ೩೧r೧7ಹ குறிப்பினை மற்றவர் ஏற்றுக் கொண்ட நிலையில்தான் கண்ணினால் வரும் குறிப்பு நிகழும். இதனையே தொல்காப்பியர், இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் فلسات nقي கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும்." (நாட்டம் கண். அறிவுடம்படுதல் - இருவரது அறி - வினையும் ஒருப்படுத்தல்; கூட்டி - தமது வேட்கை யொடு கூட்டி) - என்று கூறுவர். இவ்விதிக்குத் திருவள்ளுவனாரின், கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல." - என்ற குறளை இலக்கியமாகக் கொள்ளலாம். இங்கனம் இருவர் குறிப்பும் ஒத்து நிற்றலே உள்ளப் புணர்ச்சி யாகும். வழிநிலைக் காட்சி என்றும் இது பெயர் பெறும். இவ்வுள்ளப் புணர்ச்சியே மெய்யுறு புணர்ச்சிக்கு நிமித்தமாகும். காமப் பருவம் எய்திய காதலர்கள் உள்ளம் புணர்ந்த பின்னர் மெய்யுறு புணர்ச்சிக்கு அவாவுதல் முறையே. மனம் ஒன்றியவர் உடல் ஒன்றுதற்குத் தக்க தனியிடம் தேர்வர். இடம் வாய்ப்பின் ஒன்றுதற்குப் பின்வாங்கார். களவுக் காலத்து உடல் உறவே இல்லை என்றும், அது அறவே கூடாது என்றும் கூறுவோர் கொள்கை பிழை என்றும், அஃது இயற்கைக்கு முரண் என்றும் அறுதியிடுவர் மாணிக்கனார்." உள்ளத்தான் வேட்கை செல்லினும் மெய்யுற்றாராயிற்று" என்று இறையனார் களவிய லுரையாசிரியரின் கூற்றையும் தமது கொள்கைக்கு அரணாக அமைத்துக் கொள்வர். களவுக்காலத்து மெய்யின்பம் துய்த்தமை டிெ - 19 டிெ - 20 ைெடி - 5 குறள் - 1099 தமிழ்க்காதல் - புக் 47. இது உளவியல் உண்மையுமாகும். இறை கள். நூற்பா . 2-இன் உரை, - i