பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v அகத்திணையாய்வு, அறிஞர் ரெட்டியார்க்குப் பழகிய துறையேயாகும். தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை', 'காதல் ஒவியங்கள்', 'முத்தொள்ளாயிர விளக்கம்', 'இல்லறநெறி' கவிதையநுபவம்' என்ற இவர் முன்னைய நூல்கள் இப்பொருள் சார்ந்தன; எனினும் அகத்திணைக் கொள்கைகள்' என்ற இப் புதிய உரைநடைப் பனுவல் அகலிருவிசும்புபோல அனைத்து அகக் கூறுகளையும் தன்னுள் அடக்கியும் சித்திரக் கம்பளம்போல மடிப்பின்றி வனப்புற விரித்தும் காட்டும் பெரு நூலாகும். இந்நூலைக் கற்பவர் தொன்மை முதல் இன்றுவரை எழுந்த அகத்திணைக் கோட்பாட்டின் தொகைகளையும் உடன்பாடு களோடு மறுப்புக்களையும் மறுமறுப்புக்களையும் ஒருங்கே கற் கலாம்; சங்க விலக்கியத்தோடு பின் வந்த இலக்கியங்கள் அகத் துறையில் உறவாடுவதையும் வழிமாறுவதையும் கற்கலாம் ஆசிரியர்க்கு அன்பிலும் ஆய்விலும் பிறப்பிலும் ஈடுபாடான; ஆழ்வார் பிரபந்தங்களில் அகத்துறைகள் தெய்வச்சாயல் பெறு வதையும் கற்கலாம்; மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று.ாத’ என்ற நாச்சியார் திருமொழி தமிழ் நாகரிகத்தின் கரணச் சான்றா தலையும் கற்கலாம். நூலின் தலைப்புக்கள் மரபான வரிசையான கோவைத் தலைப்புக்களாக இருந்தாலும் ஒவ்வொரு பகுதியின் கீழும் விரிந்த விளக்கமும், பரந்த மேற்கோளும் முரண் அறுக்கும் சான்றும், காலச் சாயலும் நீரோட்டம்போல் தொடர்ந்து வரு கின்றன. "தமிழ்’ என்ற சொல்லுக்கு அகத்திணை என்ற பொருள் உண்டெனின், தமிழன்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்? பாரதத்திற்கே உரிய தனிமலை இமயமலை என்று அறிபவன் ‘பாரதன் ஆவான். தமிழுக்கே உரிய தனியிலக்கியம் அகத்தினை என்று அறிபவன் தமிழன்’ எனப்படுவான். தமிழின் பெருமையும் அருமையும் உணர்ந்த புலவர்கள் தமக்காக எழுதுவதில்லை; தமிழர்க்காக எழுதுகின்றனர். பிறப்பால் தமிழர்களைச் சிறப்பா லும் தமிழராக்க எழுதுகின்றனர். இச்சிறந்த நோக்கோடு எழுதிய இனிய பெரிய இந்நூலைக் கற்றுப் பயனடைய வேண்டுகின்றேன். மதுரை-625 621 வ, சுப. மானிக்கம் 7-12-198i