பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52
அகத்திணைக் கொள்கைகள்
 


வரைபாய்தலும் போல்வன கூறல். இந்த ஒன்பது நிலைகளும் முன்னர்க் குறிப்பிட்ட காட்சி, ஐயம், துணிவு என்ற மூன்றும் சேர்ந்த இப்பன்னிரண்டும் அன்புற்றார் இருவர் துணையாகக் கூடுவதற்குரிய நிமித்தங்களாகும் என்பது தொல்காப்பியரின் கருத்தாகும். இவை நிகழ்ந்த பின்னரே மெய்யுறு புணர்ச்சி நிகழும் என்பது அவர்தம் கொள்கை. ஒருவர் காதல் வாழ்க் கையில் இத்தனையும் நிகழ்தல் வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

மெய்யுறு புணர்ச்சியிலும் ஒரு வரையறை உண்டு. தலைவி தன் வேட்கையைத் தலைவனிடம் முன்னதாகச் சொல்லுதல் வழக்கம் இல்லை. எனினும், அவள் வேட்கையை ஆராயின் அது புதுக்கலத்தின்கட் பெய்த நீர் புறத்துப் பொசிந்து காட்டுமாறு போன்று உணர்வினையுடைத்து என்று கூறுவர் தொல்காப்பியர்.

தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப."

என்பது அவர் கூறும் விதி. மேலும், இக்களவு கூட்டி வைப்பார் பிறரின்றித் தனிமையாகவும் பொலியும். ஆதலின், தலைவன் தலைவி இருவரும், தத்தம் உள்ளக் கருத்தைத் தாமே புலப் படுத்தும் தூதுவராக நின்று கூடுதலும் உண்டு என்பது பெறப் படும். எனவே பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் ஆகியவை யாவர்மாட்டும் நிகழவேண்டும் என்ற வரையறை இல்லை என்பதை அறிதல் வேண்டும். மெய்யுறு புணர்ச்சிக்கு முன் இவ்விடத்தில் இன்னோர் உண்மையும் சிந்திக்கத் தக்கது. தலைமகளை தனிமையில் எதிர்ப் பட்ட தலைமகன், தனது பெருமையும் அறிவும் நீங்க வேட்கை மீதுர்தலால் மெய்யுறு புணர்ச்சியை விரும்பினானாயினும் தலை மகள் மாட்டு நிற்கும் அச்சமும் நாணும மடனும் அதற்குத் தடை யாக நிற்கும். அவை நீங்குதற் பொருட்டுத் தலைவன் தலை மகளை முன்னிலைப் படுத்திச் சிலபல கூறுதல் உண்டு. தொல் காப்பியர் இவற்றை, 9 അു. - 28