பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$ அகத்திணைக் கொள்கைகள் என்பது ஈண்டுத் தோள். பிற்காலத்தார் @శజ్ఞ్గణu வண் டோச்சி மருங்கணைதல் என்று வழங்குவர். அஃதாவது தலை மகளைச் சார எண்ணிய தலைவன், அவள் குழலை நோக்கி வந்த வண்டையோட்டுவது போல நெருங்கி ஒட்டுமிடத்துத் தன் கை பட்டது போலத் தொடுதலாகும் இது. பொய்பாராட்டலாவது, அங்ங்ணம் தீண்டி நின்றுழித் தலைவியின் குறிப்பறிந்து அவளை ஒதியும் நுதலும் நீவிப் பொய்யாக ஒரு காரணம் உரைத்துப் பாராட்டல் இடம் பெற்றுத் தழாஅல் ஆவது, பொய் பாராட்டல் காரணமாகத் தலைவி மாட்டு அணிமையிடம் பெற்றுத் தழுவக் கூறல். இடையூறு கிளத்தலாவது,அவள் பெரு நாணினளாதலின் இங்ஙனம் கூறக் கேட்டுக் கூட்டத்திற்கு இடையூறாகக் கண் புதைத்தல், கொம்பர்களிலும் கொடிகளிலும் மறைந்து நிற்றல் போன்றவற்றைத் தலைவி நிகழ்த்தியதைத் தலைவன் கூறுதல். நீடு நினைந்து இரங்குதலாவது, தலைவியை மெய்யுறுதற்கியலும் காலம் வாய்க்காமையை எண்ணி வருந்துதல், கூடுதலுறுதலாவது, புணர்ச்சி எய்துதல். இங்ஙனம் மெய்யுறு: புணர்ச்சி நடைபெறும் என்பது ஆசிரியர் கருத்தாகும். இயற்கைப் புணர்ச்சியை விளக்கும் துறையில் அமைந்த குறுந் தொகைப் பாடல். யாணயத் துறைவோ டேம்பாய் கூந்தல் விளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை நுண்மணல் அறல்வாரிந் தன்ன நன்னெறி யவ்வே நறுந்தண் ணியவே12 நயந்து விரும்பி; தேம்பாய் - வண்டுகள் தாவுகின்ற; அறல் - மணலில் காணப்பெறும் ஒருவகை நெளிவு: வார்ந்தன்ன - நீண்டு படிந்தாற் போன்ற நெறிப்பு - படிப்படியாய் நீரோட்டத்தினால் மணலில் உண் டாகும் சுவடு) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன், தலைவியின் கந்த லாகிய மெல்லணையில் துஞ்சி இன்புற்றவனாதலின் அக்கூந்தலின் இயல்புகளை நினைந்து இவற்றால் பெறும் இன்பத்தை இடை விடாமல் நுகரும்பேறு பெற்றிலோமே என்னும் இரக்கக் குறிப்புப் பட தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்தது இப்பாடல் தலை 12. குறுந்- 116,