பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவு பற்றிய விளக்கம் 55 வியைச் சேய்மையிற் கண்டபொழுது தோற்றத்தால் இன்பத்தைத் தரும் என்பான் நல்நெறியவ்வே' என்றுமுதலில் கூறினான்.நெருங் கும்போழ்து மணத்தால் இன்பத்தைத் தரும் என்பான் நறுமை யுடையன் என்று அடுத்துக் கூறினான். பின்னும் நெருங்கி அளவளாவிய பொழுது ஊற்றின்பம் தரும் என்பான் தண்ணிய" என்று அதற்கடுத்துக் கூறினான். வள்ளுவர் காட்டும் தலைமகன் தான் தலைவியிடம் பெற்ற புணர்ச்சியினை, கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள." என்று மகிழ்ந்து கூறுவான். இயற்கைப் புணர்ச்சியால் பெற்ற இன்பம் பற்றிக்கூறும் பாடல்களில் பல்வேறு வகை அநுபவச் சாயல் களைக் கண்டு மகிழலாம். הלייזהרה-3.הס 13 குறள் - 1101