பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$8. அகத்திணைக் கொள்கைகள் என்பது, இயற்கைப் புணர்ச்சியின்பொழுது பெற்ற இன்பம் திளைத்தல். தீராத் தேற்றம் என்பது, எஞ்ஞான்றும் பிரியா மைக்குக் காரணமாகிய சூளுறுதல். பெற்றவழி மகிழ்ச்சி என்பது, சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி அவன் அடையும் மகிழ்ச்சி. பிரிந்தவழிக் கலங்கல் என்பது, தலைமகள் தன்னை விட்டுப் பிரிந்த பின்னர்க் கலக்க முறுதல். எனவே, இளம்பூரணர் கருத்துப் படி இவை நான்கும் இடந்தலைப் பாட்டிற்குரிய கிளவியாயிற்று. இக்கிளவிகளை விளக்குவதற்கு உரையாசிரியர்கள் காட்டியுள்ள பாடல்களையெல்லாம் படித்துணர்ந்தால் இவை நன்கு விளக்கம் பெறும். நாற்கவிராச நம்பி முதலியோர் மெய் தொட்டுப் பயிறல் முதலியவற்றை இயற்கைப் புணர்ச்சியின் வகைகளாகக் கொண்டு விளக்குவர். இடத்தலைப்பாடு இருவகை தலைவன் தானே சென்று கூடுவது, பாங்கனாற் கூடுவது என்று இடந்தலைப்பாடு இரு வகைப்படும் என்று நச்சினார்க்கினியர் கூறுவர். பேராசிரியரும் 'துணையின்றி நிகழும் களவு சிறப்புடைத்தாகலாயினும், 'பாங்கன் கழறும் (இடித் துரைப்பன்) என்று அஞ்சி அவனை முந்துறத் தலைவன் மறைந்தொழுகுமாதலின் தன்னாற் கூடும் இடந்தலைப்பாடு நிகழ்ந்த பின்பே பாங்கனைத் துணையாக வேண்டுவன்' என்று கூறினர். இவ்விடத்தில் நாம் ஒன்றினை எண்ணி உணர்தல் வேண்டும். இடந்தலைப்படுவார் பெரும்பாலும் பாங்கனை இல்லாதாரும், பாங்கனை உடையரானாலும் நாணத்தைக் கடவாமல் அதன்கண் நிற்கும் நிறையுடையாரும்: அல்லது அப்பாங்கனிடத்துக் கூறினால் அவன் மறுத்துக் கூறுவானே என்றெண்ணும் அச்சமுடையாரும், பாய்கனுமிருந்து நாணமுமில்லாரான விடத்தும் வினைவழியே நிற்றல் வேண்டு மென்று நினைக்கும் நீரருமாகவே இருப்பர். இவரல்லாத ஏனையோர் பாங்கற் கூட்டம் பெறுவர். இறையனார் களவியலாரும் இவ்விடந்தலைப்பாடு இருவகைப் படும் என்றே கூறுவர். ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் தன்வயின் பாங்க னோற் குறிதலைப் பெய்தலும் 4. களவியல்-11. (நச். உரை 5. டிெ-186 (பேரா. உரை) )