பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தொரு குறிப்பு காணப் பெறவில்லை. ஆகவே, இடந்தலைப் பாடு நிகழாமலே 'பாங்கற் கூட்டம் நிகழ்தலும் உண்டு என்பது பெறப்படுகின்றது. மேலும், காமப் புணர்ச்சியை அடுத்து நிகழ்வதென்று கூறப்பெற்ற அவ் இடந்தலைப் பாட்டினைத்' தலைவன் தன் பாங்கனைப்கொண்டு குறை முடித்துக் கொள் வான் என்றதொரு குறிப்பும் அதன்ரில் தொனிக்கின்றது. எனவே, பாங்கன் என்பான் அவ் இடந்தலைப் பாட்டிற்கு வாயிலாவான் என்பது தெளிவாகின்றது. பாங்கன் வாயிலாகவே, அவ்வாற்றான் அவன் கூட்டமாகிய 'பாங்கற் கூட்டமும் அதற்கு வாயிலாக அமைகின்றது என்பதும் உடன் தெளிவாகின்றது. எனவே, :பாங்கற் கூட்டம் நிகழ்ந்தாலும் அக் கூட்டம் ஒரு கருவியின் அளவாகவே நிற்ப, ஆண்டும் நிகழ்வது இடந்தலைப்பாடே. யாகும் என்பது போதருகின்றது. ஆகவே, இப்பொழுது ‘காமப் புணர்ச்சியை, அடுத்து இடந்தலைப்பாடு நிகழும்; அது பாங்கன் துணையின்றி விதியே துணையாக நிகழ்ந்தாலும் நிகழும் , அங்ஙனம் நிகழாதாயின், அது விதியின் துணையோடு பாங்கன் துணையும் பற்றி நிகழும் என்பது பெறப்படுகின்றது. இறையனார் - தொல் காப்பியர் கருத்தொற்றுமை : இந்த இருவருடைய நூற்பாக்களின் பொருள்களில் திணைத்துணையும் முரண்பாடு இல்லை என்பதை மேலே கண்டோம். இவர்கள் கூற்றுகளில் கருத்தொற்றுமையையும் காண்போம். தொல் காப்பியர் காமப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் என்ற முறையில் களவு நடைபெறும் என்று கூறினார். இடந்தலைப்பாடு விதித்துணைபற்றியே நிகழாதா யினும் பாங்கற்கூட்டத்தால் நிகழ்ந்திடுமென்று கருதி அதனைத் காமப்புணர்ச்சிக்கு அடுத்து நிகழ்வதாக வைத்தார்; அதன் பின்னர் இன்னும் தன் குறைகளையெல்லாம் முடித்துக் கொள்ளும் பொருட்டுத் தோழியைத் துணையாகக் கொள்வான் என்று கொண்டு தோழியிற் கூட்டத்தை அதற்கடுத்து வைத்தார். ஆசிரியர் இறையனார் காமப்புணர்ச்சி புணர்ந்த தலை மகனுக்கு அதனை அடுத்து நிகழவேண்டுவதான இடந்தலைப் பாடு பெரும்பாலும் உலகில் பாங்கன் துணை-பற்றியே நிகழ்த லன்றி விதித்துணையே பற்றி நிகழ்தல் அரிதாகிச் சிறுபான்மை யாய் முடிதலின், அப்பெரும்பான்மை சிறுபான்மை வேற்றுமை தெரிதற் பொருட்டுப் பாங்கற்கூட்டத்தைக் காமப்புணர்ச்சிக்கு