பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அக த் திணைக் கொள்கைகள் சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் திருமுகம் இறைஞ்சி நானுதி கதுமெனக் g - - - --- - காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? (சொல்லின் - கூறின்; சொல்லெதிர்க்கொள்ளாய். சொல்லை எதிரேற்றுக் கொள்ளாமல்; நானுதி-நாணு கின்றனை; கதுமென - விரைவாக கைம்மிகின் - கை கடந்து மிகுமாயின்). இது குறிஞ்சி நிலக் காட்சி. இடந்தலைப்பட்ட தலைமகள் என் சொல்லுக்கெல்லாம் மறுமொழி பகராது நாணி நிற்பவளே! நின் நாணம் என் காமத்தை அதிகரிக்கச் செய்தால் அதனைத் தாங்கு வது எப்படி?" என்று தானே பன்னி நிற்கின்றான். இந்த மூன்று பாடல்களிலும் புணர்ச்சி வேட்கை புலப்படுகின்ற தேயன்றிப் புணர்ந்த குறிப்புச் சிறிதும் காணப் பெற்றிலது. இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்ற குறியீடுகள் காதலரிடைப் புணர்ச்சி உண்டு என்பதை வெளிப் படையாகக் காட்டுதல் போல, இடந்தலைப்பாடு” என்னும் குறியீடு காட்டவில்லை. கண்டால் முயங்குதல், முயங்கிதற்கே காணுதல் என்பது ஆசைக் காமம் ஆகுமின்றி அன்புக் காமம் ஆகாது. காதலர்கள் புணர்வு விருப்பின்றியும் கண்டு கொள்வர் கானுந்தோறும் புணர்வு மேற்கொள்ளார் என்பது (கீழான பருவ எழுச்சிக்கு இடங்கொடா) உயர்ந்த காதலாகும். இயற்கைப் புணர்ச்சியில் கண்டு கலந்த தலைவனுக்கும் தலைவிக்கும் அவ்வள வில் மனநிறைவு ஏற்படுமா? பிரிந்தபின் புணர்ந்த நினைவும் புணர்ந்தார் உருவமும் நெஞ்சை அரித்தன. புதிய பெரிய உறவை மீண்டும் ஒருமுறை களித்துக் காண்பதே இடந்தலைப்பாடு. இத் தலைப் பாட்டால் ஆரா இளைய நெஞ்சங்கள் வேகந்தணி கின்றன; நம்பிக்கை கொள்கின்றன என்று உட்கோள் காண்பர் மாணிக்கனார். தொல்லாசிரியர்கள் யாவரும் இடந்தலைப் பாட்டில் புணர்ச்சி நடைபெற்றதாகக் கூறியிருக்க, குறியீட்டில் புணர்ச்சிக் குறிப்பு இல்லை என்ற ஒரே காரணத்தைக் கொண்டு புணர்ச்சி நடைபெறவிலலை என்பதாகக் கொள்வது பொருத்த மாகத் தோன்றவில்லை. விரிந்து செல்லும் கற்பனை வளத்துக் கேற்றவாறு பாடல்கள் பாட இத்துறை வாய்ப்பு நல்கவில்லை 12. நற். 39 .ே தமிழ்க் காதல். பச் 49